பக்கம் எண் :


698

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
குவடு - குன்று
குவவு - குவிந்த
குவைஇ - திரண்டு
குழல் - கூந்தல்
குழிசி - தாழி
குழுமுதல் - குழுறுதல்
குளவி - மலைப்பச்சை, காட்டு மல்லிகை
குளவி - பச்சிலை
குறங்கு - துடை
குறிப்பு - கருத்து
குறியிறை - குறிய இறப்பு
குறுதல் - பறித்தல்
குறுமாக்கள் - இளமகார்
குறும்பொறை - காடு
குற்ற - பறித்துவந்த
கூடு - குதிர்
கூட்டம் - கலவி
கூதளம் - தாளிக் கொடி
கூந்தல்ஓதி - இருபெயரொட்டு
கூம்ப - குவிய
கூரலிருக்கை - மழையாலும் குளிராலும் நனைந்து நடுங்கி யிருப்பது
கூலம் - நெல், பல், வரகு, சாமை, தினை முதலிய பதினெண் கூலம்
கூவல் - கிணறு
கூவிளம் - வில்வம்
கூழை - குறுமை
கெண்டி - பறித்து
கெண்டி - அழித்து, வெட்டி,
கெண்டுதல் - வெட்டுதல்
59 111
கேண்மையோடு - நட்புடன்
கேழல் - பன்றி
கைதூவல் - கையொழிதல்
கைதூவாமை - கையொழி யாமை
கைதை - தாழை
கைம்மிக - அளவுகடப்ப
கைம்மிகல் - அளவுகடத்தல்
கையறவு - செயலறுதல்
கையறுபு - செயலழந்து
கொடி - வரிசை
கொடிறு - குறடு, பற்றுக்கோடு