பக்கம் எண் :


697

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
காழ் - இரு நான்கு கொத்துக்கொண்ட காஞ்சி என்னும் அணி
காழ் - பிணிப்பு
காழ் - இரும்புமுள்
கானல் - கடற்கரைச்சோலை
கானல் - கழிக்கரைச் சோலை
கிடங்கில் - ஓரூர்
கிணையர் - கிணைப்பறையுடையவர்
கிழக்கு - கீழிடம்
கிழிப்பு- குகை, பிளப்பு
கிளர்தல் - சினங்கொள்ளுதல
கிளர்த்தல் - எழுப்புதல்
கிளைத்தல் - விளித்தல்
கிளைமை - உறவு
குடக்கு ஏர்பு - மேலைத் திசைக் கண் எழுந்துசென்று
குடக்குவாங்கி - மேலோங்கி வளைந்த
குடந்தை - குடம்
குடம்பை - கூடு
குட்டம் - ஆழம்
குண்டு - ஆழம்
குண்டு கரை - ஆழ்ந்த கரை
குமரி - இளைய
குய் - நறும்புகை
குரம்பை - குடிசை
குரல் - கதிர்
குரால் - பெண்கூகை
குரால் - கோட்டான்
குரீஇ - குருவி
குருகு - உலைமூக்கு
குருகு - நாரை, கொக்கு
குருகு - நாரையின் பகுதியாகிய நெடலை, வக்கா முதலியன
குரும்பை மணிப்பூண் - அரையிற்கட்டும் கிண்கிணி
குருகின்தோடு - நாரையின் கூட்டம்
குருளை - இளங்குட்டி
குரூஉக்கதிர் - நல்ல நிறத்தையுடைய கதிர்
குலவுக்குரல் - வளைந்த கதிர்
குல்லை - கஞ்சா, துழாய்