கவான் - மலைப்பக்கம் | |
கவின் நலம் - அழகின் மிகுதி | |
கவைஇய - அணைத்த | |
கழிசேர் மருங்கு - உப்பங்கழிசேர்ந்த இடம் | |
கழிந்தன்று - நீங்குதலாயிற்று | |
கழுது - பேய் | |
கழுது - கட்டுப்பரண் | |
கழை - தண்டு | |
களமர் - மருதநில மாந்தர் | |
களரி - உப்புப்பூத்த பாழ் நிலம் | |
களரி - பாலையிலுள்ள களர் நிலம் | |
கறி - மிளகு | |
கனவியாங்கு - கனவுகண்டாற் போல | |
கனை - மிகுதி | |
காண்பு - காட்சி | |
காப்பு - காத்தல் | |
காமம் - விருப்பம் | |
காம்பு - மூங்கில் | |
காய - காயை உடைய | |
காயாங்குன்றம் - காயா மரங்களையுடைய மலை | |
காய்ஞாயிறு - காய்கின்ற சூரியன் | |
காரான் - எருமை | |
கார்செய்து - கார் காலத்தைச்செய்து | |
கால் - காற்று | |
கால்கிளர்த்தல் - (பேய்) காற்றைப்போல இயங்கல் | |
கால்யாத்தல் - நெருங்கல் | |
காவொலை - முற்றிய ஓலை | |
காழ் - வைரம் | |
காழ் - காஞ்சி | |