பக்கம் எண் :


695

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
கதழ்வு - விரைவி
கதித்தல் - விளையாடுதல்
கதுப்பு - கூந்தல்
கந்து - தறி
கமம் - நிறைவு
கமழ்தல் - விளங்குதல்
கம்மியர் - கருமகாரர்
கயந்தலை - மெல்லியதலை
கயம் - பொய்கை
கயல்ஏர் - கயல்போன்ற
கயவாய் - பெரியவாய்
கயன் - ஊற்றுநிலை
காரம் - முதலை
கருங்கால் - கரிய அடிமரம்
கரும்பு - காமன் வில்
கருவி - மின்னல் முதலியவற்றின் தொகுதி
கருவிளை - கருங்காக்கணம்
கருவினை - பாவவினை
கலாவும் - கலக்கும்
கலி - செருக்கு
கலிகெழுபாக்கம் - கட்குடியின் செருக்கு அடங்கிய பாக்கம்
கலிகெழுமறுகு - ஓசைமிக்க தெரு
கலிங்கம் - ஆடை
கலித்த கருங்கால் - தழைத்த கரிய அடி
கலித்தல் - முளைத்தல்
கலித்தல் - மிகுதல்
கலிமயில் - செருக்கிய மயில்
கலிமா - குதிரை
கலுழ்தல் - அழுதல்
கலை - ஆண்குரங்கு
கலைஇய - கலைந்துபோகிய
கல்கெழு - மலைபொருந்திய
கல்லாக்கோவலர் - பிறதொழிலைக் கல்லாத ஆயர்
கல்விளை உப்பு - கல்லாக விளைந்த உப்பு
கவலை - கவர்த்த வழி
கவலைய - கவர்த்த நெறிகளையுடைய