அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
கடிகொண்டு - சிறப்புச் செய்து | |
கடிதல் - தடுத்தல் | |
கடிப்படுத்தல் - காவலுட் படுத்தல் | |
கடிப்பு - குறுந்தடி | |
கடியும் உண்டான - கொய்யப்பட்டன | |
கடுங்கள்-முற்றிக் கடுப்பேறியகள் | |
கடுந்தேர் - விரைந்த செலவினையுடைய தேர் | |
கடுமா - கொடிய சிங்க முதலிய விலங்குகள் | |
கடும்பாட்டாங்கண் - ஒலிமிக்க அவ்விடத்திலே | |
கடும்பு - சுற்றம் | |
கடைஇ - கடிந்து | |
கடைஇ - செலுத்தி | |
கடைய - செலுத்துதலால் | |
கட்சி - பறவைக்கூடு | |
கட்டழித்தல் - முற்றஒழித்தல | |
கட்டளை - பொன் உரைக்கும் கல் | |
கட்டு - கழங்குக்குறி | |
கணிச்சி - குந்தாலி | |
கணிவாய் வேங்கை - சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரம் | |
கணைக்கால் - திணை்டதண்டு | |
கண் - மூங்கிற் கணு | |
கண்அகல் - இடம் அகன்ற | |
கண்டல் - ஒரு மரம் | |
கண்டோர் தண்டாநலன் - பார்ப்போராலே கெடாத நலன் கண்ணெச்சில் | |
கண்ணழிவு - தடை | |
கண்ணிகட்டல் - அரும்புதோன்றுதல் | |
கண்ணி - போர்க்குச் சூடும் பூ | |
கண்படை பெறாது - தூங்காது | |
கதம் - சினம் | |
கதழ்பெயல் - விரைவையுடைய மழை | |