அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
ஒக்கல் - சுற்றம் | |
ஒசித்த - முறித்த | |
ஒய்யுதல் - செலுத்துதல் | |
ஒய்யும் - செலுத்தும் | |
ஒருத்தல் - விலங்கின் ஆண்பாற் பெயர் | |
ஒருமைசெப்பிய அருமை - ஒரு தன்மையாகப் பொருள் வயிற் செல்லும்படி உறுதிப் படுத்திக் கூறிய அருமையாகிய மொழி | |
ஒருவேன் - ஒருத்தியாகிய யான் | |
ஒலிதல் - தழைதல் | |
ஒலிதல் - தாழ்தல் | |
ஒழுகல் - நேர்மை | |
ஒழுகை - பாண்டில், பண்டி; வண்டி | |
ஒற்றுதல் - அடுத்தல் | |
ஓக்குபு - ஒச்சி | |
ஓங்குமிசை - உயர்ந்த இடம் | |
ஓடை - நெற்றிப்பட்டம் | |
ஓதம் - வெள்ளம் | |
ஓதி - ஒந்திக்கு ஒரு பெயர் | |
ஓப்பி - வெருட்டி | |
ஓய்விடு நடைப்பகடு - உழுது விட்ட ஓய்ந்த நடையையுடைய பகடு | |
ஓரனையேன் - ஒருதன்மையேன் | |
ஓரன்மை - ஒருதன்மையல்லாமை | |
ஓரை - மகளிர் பாவைகொண்டு விளையாடுவது | |
கச்சு - முதுகில் இட்ட கலனை நழுவாதபடி குதிரையின் பின்னே மாட்டிக் காட்டும் வார் | |
கடந்த - வென்றுகொண்ட | |
கடம்பு - செங்கடம்பு | |
கடல் மரம் - கப்பல் | |
கடன் தீர்த்தல் - தன்கடமையைச் செய்து தீர்த்தல் | |
கடிகம் - வெருட்டுவோம் | |