பக்கம் எண் :


129


     (வி - ம்.) மயிர் - நெல்வாலுக்குவமை. கோல் - திரட்சி. இனியான் என்பது முதற்குறிப்பெச்சம்.

     இறைச்சிகள்:- (1) பேய் மலர்ப்பலியுண்ணவேண்டி மன்றத்தைப் புடைத்தெழு மென்றது, பசலையானது என்னலத்தையுண்ணவேண்டி நெஞ்சைப் புடைத்து நெற்றியிலெழுமென்றதாம்.

     இறைச்சிகள்:- (2) செறுவில் அன்னந்துஞ்சுமென்றது, யானும் சேக்கையின்கண்ணே அவர் மார்பிற் றுஞ்சியிருந்தேன்; இப்பொழுது அஃதில்லை போலுமென்றிரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) செவ் வரி மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர் என்பதற்கு, சிவந்த சிங்கத்தின் பிடரிமயிரை நிரைத்துனவத்தாற் போன்று சிவந்த நெடிய வைக்கோலையுடைய வளைந்த கதிர் எனினுமாம்.

(63)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தலைவி பாணற்கு வாயின் மறுத்தது.

     (து - ம்.) என்பது, தலைவி புதல்வனைப் பெறுங்காலத்துப் பரத்தையிற் பிரிந்த தலைவன், அவள் நெய்யாடியபின் வந்து புலவிநீக்க வேண்டிப் பாணனை விடுப்ப அப்பாணனை நோக்கித் தலைவன் ஏதிலாளனாயினான். காதற்பரத்தை மனைவியேயென்றிவ்வூரறிந்துவிட்டது இனி மாறாது; ஆதலின், அதனை மறைத்து ஈண்டுக் கூறதொழியெனத் தலைவி புலந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை "அவனறிவு ஆற்றவும் அறியு மாகலின்" என்னும் நூற்பாவினுள் (தொல்-கற்- 6.) வாயிலின் வரூஉம் வகை என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை 
    
இடிக்குரல் புணரிப் பௌவத் திடுமார் 
    
நிறையப் பெய்த அம்பி காழோர் 
    
சிறையருங் களிற்றின் பரதவர் ஒய்யுஞ் 
5
சிறுவீ ஞாழல் பெருங்கடற் சேர்ப்பனை 
    
ஏதி லாளனும் என்ப போதவிழ்  
    
புதுமணற் கானல் புன்னை நுண் தாது 
    
கொண்டல் அசைவளி தூக்குதொறுங் குருகின் 
    
வெண்புற மொசிய வார்க்குந் தெண்கடல் 
10
கண்டல் வேலிய ஊர் அவன்  
    
பெண்டென அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே. 

     (சொ - ள்.) வடிக் கதிர் திரித்த வன் ஞாண் பெருவலை இடிக்குரல் புணரிப் பௌவத்து இடுமார் - திருத்தமாகச் செய்யப்பட்ட