பக்கம் எண் :


701

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
சூட்டயல் - அரிச்சூட்டின் பக்கம
சூர் - அச்சம்
சூர் உடைப்பலி - தெய்வத்துக்கு இடும் பலி
செகீஇய - கொல்லும் பொருட்டு
செஞ்சால் உழவர் - செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர்
செத்து - கருதி
செத்து - ஒத்து
செந்தார் - கழுத்திலிட்ட வரை
செந்தொடை - செவ்விய அம்புத்தொடை
செந்நாவின் - செவ்விய நாவினையுடைய
செம்புசொரிபானை - செம்பாற் செய்து கடைந்து வைத்த பானை
செம்மல் - செல்வமாக்கள்
செம்மூதாய் - தம்பலப்பூச்சி
செயலை - அசோகு
செய்தன்று - செய்தது
செய்போழ் - சிவந்தபனங் குருத்து
செலவயர்ந்திசின் - செல்லுமாறு யான் உடன்படாநின்றேன்
செல்லாதீம் - நீர் செல்லாது இங்கே இருமின்
செவ்வேர் - சிவந்த வேர்
செறுவின் - சேற்றினையுடைய
சென்னி - உச்சி
சேக்கை - படுக்கை
சேணோன் - மரத்தின்மீதிருந்து இரவில் தினைப்புனங் காப்பவன்
சேப்ப - சிவக்க
சேரி - பலவீடுகள் சேர்ந்திருப்பது
சேர் - திரட்சி
சேர்பு - சேர்தல்
சேறி - செல்லா நின்றனை
சேறும் - செல்வோம்
சொன்றி - சோற்றுத்திரள்
ஞமலி - நாய்