அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
ஞாட்பு - போர் | |
ஞால் - தொங்குகின்ற | |
ஞான்று - இறங்கி, தொங்கி | |
ஞெகிழி - கொள்ளி | |
ஞெமிர்தல் - பரத்தல் | |
ஞெமிர்ந்தென - உடைப்பட்டதனால் | |
ஞெமுங்கல் - நெருங்கல் | |
ஞெமுங்குதல் - அழுந்துதல் | |
ஞெலிகோல் - தீக்கடைகோல் | |
தகைத்தல் - தடுத்தல் | |
தசும்பு - தாழி | |
தடமருப்பு - வளைந்த கொம்பு | |
தடவு - சாடி, பானை | |
தடவு - வளைவு | |
தடவுநிலை - பெரிதாய் நிற்றல் | |
தடைஇய - பருத்த | | |
தட்டை - மூங்கிற் பிளாச்சைச் சிறிது பிளந்து அப் பிளப்பிலே கல்லை வைத்துச் சுழற்றிவீசுங் கருவி | |
தட்பு - தகைத்துக்கொள்ள | |
தண்சிதர் உறைப்ப - தண்ணிய பனித்துளிகள் மிகவிழ | |
தண்டா - கெடாத | |
தண்ணடை - மலைப்பச்சை | |
தண்ணுமை - எழுச்சிக்குரிய வாச்சியம் | |
தண்நடை - மெல்லியநடை | |
தண்மை - மென்மை | |
தண்வளி - தண்ணிய காற்று | |
ததரல்வாய் - தலைவனைச் சாந்து மணம் முடிக்கும் பொழுது | |
ததர்பிணி - நெருங்கிய பிணிப்பு | |
ததைஇ - பெற்று | |
ததைந்த - நெருங்கிய | |
தலைமயங்கிய - நிரம்பிய | |
தலையல் - நீங்குதல் | |
தழூஉகம் - கையகப்டுப்போம் | |
தழைத்தல் - செழித்தல் | |
தளவு - முல்லை | |
தளி - மழை | |