அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
புதையப் பா அய் - மறையப் பரந்து | |
புயல் - மழை | |
புள்ளி - குறியீடு | |
புருவை - யாடு | |
புரை - உயர்ச்சி | |
புரையில் - மேன்மையில்லாத | |
புலம்பு - துன்பம் | |
புலர்வது - வெளிப்படுவது | |
புலிசெத்து - புலியோசையோ என்று | |
புழுக்கல் - சோறு | |
புழை - நுழைவழி | |
புள் - வண்டு | |
புறங்கடுப்ப - முதுகு நெளியு மாறுபோல | |
புறவு - காடு | |
புனிற்று - அப்பொழுது ஈன்ற | |
புனை இருங்கதுப்பின் - அலங்கரித்த கரிய கூந்தலையுடைய | |
புன்கால் - மெல்லிய காம்பு | |
புன்தலை - மெல்லிய தலை | |
பூங்கண் மடந்தை - நீலமலர் போன்ற கண்களையுடைய மடந்தை | |
பூங்கோடு - பொலிவு பெற்ற சங்கு | |
பெண்ணை - பனை | |
பெரிது கமழ் அலரி - பெரிது மணம் வீசுகின்ற மலர் | |
பெருங்கடை இறந்து - பெரிய தலைக்கடை வாயிலையும் நீங்கி | |
பெருநலத்த - பெரிய அழகமைந்த | |
பெரும்பிறிது - சாக்காடு | |
பெரும்புலர் விடியல் - பெரிய இருள்நீங்கும் விடியற்காலம் | |
பெரும்பெயல் - பெரியமழை | |
பெயர்படல் - பெயர்ந்து போதல் | |
பெயர் பெயர்த்தல் - புதல்வனை ஈன்றதனால் பருவப் பெயர் மாறுபடுதல் | |