பக்கம் எண் :


84


அதன் கரிய பிடி யானை; உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது - வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க மாட்டாமே; நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்பைதல் அம் குழவி தழீஇ - நெய்தலின் பசிய இலையை ஒக்கின்ற அழகிய செவியையுடைய துன்புற்ற தன் (அழகிய) கன்றினை அணைத்துக்கொண்டு; ஒய்யென அரும்புண் உறுநரின் வைகும் கானக நாடற்கு - விரைவாகத் தீர்த்தற்கரிய புண்ணுற்றாரைப் போல வருத்தமுற்றிருக்கும் கானக நாடனை நெருங்கி; இது என யான் அது கூறின் எவன் ? - நீ தலையளி செய்யாமை காரணமாக இப் பசலை தோன்றிற்றுக் கண்டாய் என்று யான் அதனைக் கூறின் அதனால் ஏதேனும் குற்றப்பாடுளதாமோ? உளதாயிற் கூறிக்காண்; எ - று.

     (வி - ம்.) உழுவை-புலி. அகஞ்செவியுமாம். பைதல்-வருத்தம். ஒய்யென- விரைவாக, கோட்டம்-மாறுபாடு. காட்டி-காட்டவெனத்திரிக்க. முருகு : பண்பாகுபெயர். கழங்கு-கழற்சிவித்துப் பலவற்றை முருகன்முன் போகட்டு வேலன் தன் தலையில் ஆடைசூடிக் கையிற் பல தலைகளிற் சிறு பைகளைக் கட்டிய கோலொன்றேந்தி அக்கோலாற் கழங்கு வித்துக்களை வாரியெடுப்புழிக் குறிப்புக்காணுகின்ற ஒரு வகைக் குறி. இதனை "அருஞ்சுரம்" (அகம் 195 என்ற செய்யுளாலறிக).

     அன்னை வெறியெடுத்தாளெனத் தலைவன் பிரிந்ததனானாய தலைவியின் வேறுபாடு கூறினாள். வெறியெடுப்புப் பசலையைத் தீர்த்தில தென்றதனால் அவளுக்குப் பசப்புத் தோன்றினமை யறிவுறுத்தினாள். நாடனுக்குச் சொல்லுவாமென இதுகாறும் அவன் தம்மைக் கருதாதிருந்தமை யறிவுறுத்தினாள்.

     உள்ளுறை : களிற்றைப் புலி கொன்றதனாலே பிடியானை தன் கன்றொடு நின்று உயங்கா நிற்குமென்றது நம் பெருந்தகைமையை அலர் கெடுத்தலாலே வருந்தி யான் நின்னுடன் சேரநின்று உயங்கா நிற்பே னென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - வரைவுடன்படுத்தல்.

     (பெரு - ரை.) உழுவை பெருங்களிறு அட்டென மாறுக. இது - இப்பசலை, அது - நீ தலையளி செய்யாமையாகிய அது.

(47)
  
     திணை : பாலை.

     துறை : இது, பிரிவுணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, கற்பினுட் பிரிவுணர்த்திய தலைவனைத் தோழி நோக்கி "முன்பு நீயிர் தலைவியை உடன்கொண்டு வரும்நெறியில் எதிர்த்தாரைப் போர் தொலைத்துச் செல்லுங்காலை என் ஐயன்மார் பின் தொடர்ந்து வருதலும் எம்மைக் கைவிட்டு மறைந்து கொண்ட காடு இப்பொழுதும் என்கண்ணெதிரி லிருப்பதுபோலச் சுழலாநிற்கும்; அதனுள் எங்ஙனம் ஏகற்பாலீ" ரென மறுத்துக்கூறா நிற்பது.