பக்கம் எண் :


93


     உள்ளுதோறு மகிழ்ச்சி நல்கு முறுதியுடைய இவளின்பத்தினும் நிலைக்கும் வன்மையுடையதன்றென்பான் மெல்லிதென்றான். மெய்ப்பாடு -பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்கல்.

 (பெரு - ரை.) 
"செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே 
  
 வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" 

என்னும் விதியுண்மையாற் றலைவன் செலவழுங்குதலும் பாலைத்திணையே ஆகும். இதனை யுணர்ந்து யாண்டும் கடைப்பிடிக்க.

(52)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவுநீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வரையாது நீட்டித்த தலைமகன் ஒருகால் வந்து ஒரு சிறைப்புறத்தானாதலையறிந்த தோழி அவன் கேட்டு விரைய வரைந்தெய்துமாற்றானே தலைவியை நம் அன்னை நின்னோய் அகலுமாறு கான்யாற்றி லாடிவரக் கூறினாளாதலால் நங் களவொழுக்கத்தை அறிந்தாள் அன்றி அருளினா லேவினள்கொல் அவள் கருதியது யாது கொல்லென மருண்டு கூறா நிற்பது.

     (இ - ம்.) இதனை, 'களனும் பொழுதும் . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண், வகையென்பதனுள் அமைத்துக் கொள்க. இது, தாய் அறிந்தனள் என்று அச்சுறுத்தி வரைவு கடாயது.

    
யானஃது அஞ்சினென் கரப்பவுந் தானஃது 
    
அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ 
    
எவன்கொல் தோழி அன்னை கண்ணியது 
    
வானுற நிவந்த பெருமலைக் கவாஅன் 
5
ஆர்கலி வானந் தலைஇ நடுநாள் 
    
கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று 
    
முளியிலை கழித்தன 1முகிழிண ரொடுவரு 
    
விருந்தின் தீநீர் மருந்து மாகும் 
    
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி 
10
முனியா தாடப் பெறினிவள் 
    
பனியுந் தீர்குவள் செல்கென் றோளே. 

     (சொ - ள்.) தோழி யான் அஃது அஞ்சினென் கரப்பவும் - தோழீ ! தலைமகன் வைவிடுதலானே நீ துன்புற்றிருந்தனை இன்ன

  
 (பாடம்) 1. 
முகிழ்மலரொடு வரு.