பக்கம் எண் :


94


காரணத்தால் நீதான் இங்ஙனமாயினை என்று கூறாமல் யான் அஞ்சி அதனை மறைத்திருப்பவும். அன்னை வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனைபெயல் பொழிந்ெ்தன. - அன்னை என்னை நோக்கி ஆகாயத்தில் மிகவுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தில் மிக்க இடியோசையையுடைய மேகம் மழைபெய்யத் தொடங்கி நள்ளிருளில் மிக்க மழை பொழிந்ததனாலே; கல்கான யாற்று முனி இலை கழித்தன முகிழ் இணரொடு வருவிருந்தின தீ நீர் - கற்கள் நிரம்பிய காட்டின் கண் ஓடும் யாற்றிலே மரங்கள்காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்த்த பூங்கொத்துக்களையும் அடித்துக்கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது; மருந்தும் ஆகும் - இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் மருந்துமாகும்; தண் என உண்டு கண்ணின் நோக்கி முனியாது ஆடப்பெறின் - அதனைக் குளிர்ச்சிபெறப் பருகி ஆண்டுள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி நீராட்டத்து வெறுப்பின்றி ஆடப்பெற்றால்; பனியும் தீர்குவள் செல்வ என்றோள் - இவள் மெய்யின் நடுக்கமுந் தீர்குவள், ஆதலால் ஆங்குச் செல்வீர்களாக என்று கூறினள்; தான் அஃது அறிந்தனள்கொல் அருளினள் கொல் கண்ணியது எவன் கொல் ? - ஆதலின் அவள் தான் நமது ஒழுகலாற்றை முன்னமே அறிந்து வைத்தனள் கொல் ? அன்றி அருளினாற் கூறினள் கொல் ? நம் அன்னை கருதியது யாது கொல்? ஆராய்ந்து காண் !: எ - று.

     (வி - ம்.) முளியிலை - காய்ந்த சருகு. இணர் - பூங்கொத்து. மருந்து - காமநோய்க்கு மருந்து. பனி - அதனாலுண்டாய நடுக்கம்.

     வரைவு நீட்டித்தமையால் இவையுண்டாயினவெனவும், அன்னையும் அறியலாயிற்றெனவே இற்செறித்து வெறியெடுக்குமெனவுந் தலைவன் கொள்ளும்படி கூறியவாறறிக. நோயுடைத் தென்றஞ்சி நீராடற்கு வெறாமே யாடுக வென்னுங் குறிப்பால் முனியாதாடப் பெறினென்றாள். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த அழுகை பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) இதன்கண் மரஞ்செடிகொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழைபெய்தமையால் அம்மழைநீர் பெருகி வரும் யாற்று நீரில் ஆடின் அது பல்வேறு மருந்துச் சேர்க்கையுடைமையான் ஆடுவாருடைய உடல் நோயைத் தீர்க்கும் என்னுமோர் அருமந்த கொள்கையைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் கொண்டிருந்தமை புலனாதல் உணர்க.

(53)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, காமமிக்க கழிபடர் கிளவி.