|
|
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
|
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
|
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
|
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
|
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
|
கழை நிவந்து ஓங்கிய சோலை |
|
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை |
|
கடிநகர் புக்கு, ''வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
|
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! |
|
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் |
|
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு, |
|
இனிய செய்த நம் காதலர் |
|
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே! |
உரை |
|
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார் |
|
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்; |
|
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; |
|
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும், |
|
கடவுள் நண்ணிய பாலோர் போல, |
|
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப் |
|
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே. |
உரை |
|
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நெடும்பல்லியத்தன் |
|
''காமம் காமம்'' என்ப; காமம் |
|
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், |
|
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல் |
|
மூதா தைவந்தாங்கு, |
|
விருந்தே காமம்-பெரும்தோளோயே! |
உரை |
|
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன் |
|
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க |
|
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, |
|
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, |
|
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப, |
|
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; |
|
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என் |
|
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே? |
உரை |
|
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன் |
|
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி |
|
அன்ன இனியோள் குணனும், இன்ன |
|
இன்னா அரும் படர் செய்யும்ஆயின், |
|
உடன் உறைவு அரிதே காமம்: |
|
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே! |
உரை |
|
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஐயூர் முடவன் |
|
''செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்'' என்று, |
|
அத்த ஓமை அம் கவட்டு இருந்த |
|
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி |
|
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் |
|
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, |
|
நல் அடி பொறிப்பத் தாஅய்ச் |
|
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. |
உரை |
|
செலவுக் குறிப்பு அறிந்து. ''அவர் செல்வார்'' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன். |
|
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் |
|
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை |
|
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், |
|
நின்று கொய மலரும் நாடனொடு |
|
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே, |
உரை |
|
வரை விடை, ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
|
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
|
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
|
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
|
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
|
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
|
தளை அவிழ் பல் போது கமழும் |
|
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. |
உரை |
|
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் |
|
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி |
|
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு |
|
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி |
|
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு |
|
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. |
உரை |
|
பிரிந்து வந்த தலைமகன், ''நன்கு ஆற்றுவித்தாய்!'' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next