|
|
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
|
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
|
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
|
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
|
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
|
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
|
நல் மா மேனி பசப்ப, |
|
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. |
உரை |
|
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |
|
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், |
|
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து |
|
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர் |
|
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை |
|
குன்றகச் சிறுகுடி இழிதரும் |
|
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே? |
உரை |
|
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் |
|
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் |
|
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை |
|
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு |
|
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் |
|
பணிக் குறை வருத்தம் வீட, |
|
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? |
உரை |
|
''அறத்தோடு நிற்பல்'' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன் |
|
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு |
|
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப, |
|
பனி புலந்து உறையும் பல் பூங் கானல் |
|
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் |
|
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று |
|
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே? |
உரை |
|
''வரைவிடை ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார் |
|
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் |
|
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச் |
|
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து, |
|
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் |
|
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல் |
|
வல் விற் கானவர் தங்கைப் |
|
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே. |
உரை |
|
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன் |
|
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, |
|
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- |
|
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் |
|
கடு மா நெடுந் தேர் நேமி போகிய |
|
இருங் கழி நெய்தல் போல, |
|
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே, |
உரை |
|
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது. - குன்றியன் |
|
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே |
|
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே; |
|
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின; |
|
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என |
|
யான் தன் அறிவல்; தான் அறியலளே; |
|
யாங்கு ஆகுவள்கொல் தானே- |
|
பெரு முது செல்வர் ஒரு மட மகளே? |
உரை |
|
தோழியை இரந்து பின் நின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை |
|
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு |
|
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, |
|
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல, |
|
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, |
|
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் |
|
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள் |
|
விளங்கு நகர் அடங்கிய கற்பின் |
|
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே. |
உரை |
|
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார் |
|
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை |
|
உறை அறு மையின் போகி, சாரல் |
|
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் |
|
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் |
|
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க் |
|
குவளை உண்கண் கலுழப் |
|
பசலை ஆகா ஊங்கலங்கடையே. |
உரை |
|
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார் |
|
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, |
|
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி, |
|
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை, |
|
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல் |
|
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் |
|
பெயர்தரப் பெயர்தந்தாங்கு, |
|
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே. |
உரை |
|
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன் |
|