|
|
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் |
|
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், |
|
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, |
|
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; |
|
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் |
|
கையற வந்த பையுள் மாலை, |
|
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை |
|
தாஅம்நீர் நனந்தலை புலம்பக் |
|
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! |
உரை |
|
பிரிவிடை, ''பருவ வரவின்கண் ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார் |
|
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- |
|
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு |
|
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், |
|
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் |
|
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை |
|
தமரின் தீராள் என்மோ-அரசர் |
|
நிரை செலல் நுண் தோல் போலப் |
|
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! |
உரை |
|
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார் |
|
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் |
|
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, |
|
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் |
|
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் |
|
களிறொடு பட்ட ஞான்றை, |
|
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே |
உரை |
|
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர் |
|
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி |
|
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற |
|
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, |
|
முன் நாள் இனியது ஆகி, பின் நாள் |
|
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, |
|
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே. |
உரை |
|
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார் |
|
நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே, |
|
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்; |
|
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; |
|
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக் |
|
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; |
|
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் |
|
அளிதோதானே நாணே- |
|
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே! |
உரை |
|
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, ''நாம் ஆண்டுச் சேறும்'' எனத் தோழிக்கு உரைத்தது. |
|
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
|
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
|
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
|
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
|
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
|
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
|
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? |
உரை |
|
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமன். |
|
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ |
|
நெய்தல் மா மலர்ப் பெய்த போல |
|
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, |
|
''அன்னாய்!'' என்னும் குழவி போல, |
|
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், |
|
நின் வரைப்பினள் என் தோழி; |
|
தன் உறு விழுமம் களைஞரோ இலளே. |
உரை |
|
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன் |
|
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத் |
|
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, |
|
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் |
|
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய |
|
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, |
|
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, |
|
மெய்ம் மலி உவகையின் எழுதரு |
|
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே. |
உரை |
|
பிரிவுணர்த்திய தோழி, ''பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வருந் துணையும் ஆற்றியுளராவர்'' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க |
|
பாசி அற்றே பசலை-காதலர் |
|
தொடுவுழித் தொடுவுழி நீங்கி, |
|
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. |
உரை |
|
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பரணர் |
|
''சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, |
|
களைகலம் காமம், பெருந்தோட்கு'' என்று, |
|
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, |
|
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப் |
|
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! |
|
இன்று தந்தனை தேரோ- |
|
நோய் உழந்து உறைவியை நல்கலானே? |
உரை |
|
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார் |
|
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
|
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
|
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
|
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
|
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
|
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
உரை |
| வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் |
|