பக்கம் எண் :


201


நும்பாலுள்ள நினைவு என்னை விரைவில் மீளச் செய்தது” என்பது அவன் கூற்றினாற் புலப்பட்டது.

     ஓகாரங்கள் வினா; ஏகாரங்கள் அசைநிலைகள்.

     மேற்கோளாட்சி மு. இளமையும் காமமும் நோக்காது பெயர்ந்தீரென்று கூறி இதற்குக் காரணம் என்னையெனத் தலைவன் வந்துழிக் கேளிர் நிகழ்த்தும் நிகழ்ச்சிக்கண் தலைவற்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு, 5, இளம்.); மீண்டுவந்த தலைவனை இடைச்சுரத்து மறந்தீரோவெனத் தலைவி வினாவிய வழி அவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, ந.)

     ஒப்புமை பகுதி1. உள்ளினெனல்லெனோ யானே: நற். 3:7.

    4.மலிர்நிறை: ஐங். 15:1, 42:3, 72:4.

    கோடுதோய் மலிர்நிறை: அகநா. 166:15, 341:4.

    கோடு - பக்கம்; அகநா. 39:21.

    மு. அகநா. 29.

(99)
  
(தலைவன் பாங்கனுக்கு, “யான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)
 100.    
அருவிப்பரப்பி னைவனம் வித்திப் 
    
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்  
     
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்  
     
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்  
5   
வல்வில் லோரி கொல்லிக் குடவரைப்  
     
பாவையின் மடவந் தனளே  
     
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. 

என்பது (1) பாங்கற்கு உரைத்தது.

     (2) அல்லகுறிப்பட்டு மீள்கின்றான், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (அல்ல குறிப்படுதல் - குறியல்லதனைக் குறியாகக் கருதிச் செல்லுதல்; தொல். களவு. 42; இறை. 17)

கபிலர்.

     (பி-ம்.) 2. ‘கடுக்கும்’; 3.’காந்தளஞ் சிலம்பிற் சிறுகுடி’, ‘பசித்தெனக’்; 4.’கடுங்கண் யானைக்.

     (ப-ரை.) தோழி----, அருவி பரப்பின் - அருவி பாயும் பரந்த நிலத்தில், ஐவனம் வித்தி -மலைநெல்லை விதைத்து, பரு இலை குளவியொடு - இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலைமல்லிகையோடு, பசுமரல் - பசியமரலை, கட்கும் -களைந்தெறியும், காந்தள் வேலி - காந்தளையே இயற்கை வேலியாகவுடைய, சிறுகுடி - சிற்றூரிலுள்ளார், பசிப்பின் - உணவின்றிப் பசித்தாராயின்,