வல்வில்லின் தன்மை: கம்ப. குலமுறை. 26, மராமரப். 138-9.
வல்வில் ஓரி: நற்.6:9; அகநா. 209:13-4; புறநா. 158:5.
கொல்லிமலை ஓரிக்குரியது: “ஓரி கொல்லி”(நற். 265:7); “ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 208:21-2); “ஓங்கிருங் கொல்லிப் பொருநன்”, “கொல்லி யாண்ட வல்வி லோரி” (புறநா. 152:31, 158:5.)
5-6. கொல்லிப்பாவை: குறுந். 89: 4-6, ஒப்பு.
7. தோள் மணத்தல்: குறுந். 50:5, ஒப்பு.
தோள் அரிய: குறுந். 272:1-8.
(100)
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.) 101. | விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் |
| அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் |
| இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே |
| பூப்போ லுண்கட் பொன்போன் மேனி |
5 | மாண்வரி யல்குற் குறுமகள் |
| தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. |
என்பது (1) தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
(பாங்காயினார் - தோழி முதலியோர்.)
(2) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கிய தூஉமாம்.
(வலித்தநெஞ்சு - பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த நெஞ்சு செலவு அழுங்கியது - செல்லுதலைத் தவிர்ந்தது.)
பரூஉமோவாய் (பி-ம். பருவ மோவாய்)ப் பதுமன். (ப-ரை.) விரி திரை பெரு கடல் - விரிந்த அலையையுடைய பெரிய கடல், வளைஇய உலகமும் - வளைந்த பூவுலக இன்பமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் - பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும், இரண்டும் - ஆகிய இரண்டும், பூ போல் உண்கண் - தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போல் மேனி - பொன்னைப் போன்ற நிறத்தையும், மாண் வரி அல்குல் - மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்