பக்கம் எண் :


199


என்றவழி, குறித்தபருவங் கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று; உருவுவமம் இவ்வாறு பொருளுணர்த்துதற் பகுதிநோக்கி உவமப் பகுதியென்றா னென்பது’ (தொல். உவம.1, பேர்.); தன்னைத் தலைவன் காணா வகை நாணால் மறைந்தொழுகினும், தன் பொலிவழிவினைத் தலைவனுக்குக் காட்டல் வேண்டுதற்கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும்: ‘இன்னளாயினளென்றது, தற்காட்டுறுதல்; செப்புநர்ப்பெறினே யென்ற தனாற் களவாயிற்று, கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின்’ (தொல். களவு. 20, ந.); தலைவி தன் துயர் தலைவனுக்கு உரைத்தல் வேண்டு மென்றது (இ.வி. 521.)

    ஒப்புமைப் பகுதி 1-3. தலைவி தன் வேறுபாட்டைத் தலைவனுக்கு அறிவிக்க விரும்புதல்: குறுந் 185:1-8, 310:5-7, 332,மு.நற்.3;7.

    4. நீர்வார் பைம்புதல்: குறுந். 240:1, 242:3.

    5. பீர்க்கு மழைக்காலத்தில் மலர்தல்: நற்: 227:7; புறநா.116:6; “மாரிப் பீரத்தலர்” (சிலப். 7:38)

    4-5. புதற்கலித்த பீரம்: “பொன் போற் பீரமொடு புதற்புதன் மலர” (நெடுநல்.14); “இவர் கொடிப் பீர மிரும்புதன் மலரும்” (ஐங். 464:2); “புதலிவர் பீரி னெதிர்மலர்” (அகநா. 135:2.)

    1-5.பசலைக்குப் பீர்க்கின் மலர்: நற். 197:1-2, 277:6-8, 326: 6-7.அரிது:கலி. 31:4, 53:14-5, 124:8, 143:49; அகநா.45:7-8, 57:12-3, 135:2-3; ஐந்திணை ஐம்பது, 2; திணைமாலை நூற். 100, 116; சிலப். 7:38.

    கார்ப்பருவத்தில் தலைவன் வாராமையால் தலைவி பீர்க்க மலரைப் போன்ற பசலை அடைதல்: “ வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசிக், கறங்குர லெழிலி கார்செய்தன்றே, பகைவெங் காதலர் திறைதரு முயற்சி, மென்றோ ளாய்கவின் மறையப,் பொன்புனை பீரத் தலர்செய்தன்றே” (ஐங். 452)

(98)
  
(பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினாவிய தோழிக்கு, “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)
 99.   
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி 
    
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து 
    
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே 
    
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை 
5
இறைத்துணச் சென்றற் றாஅங் 
    
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே. 

என்பது பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், ‘எம்மை நினைத்தும் அறிதிரோ?’ (பி-ம். ‘நினைத்துமறியிரோ’) என்ற தோழிக்குச் சொல்லியது.

    (முற்றி - நிறையப் பெற்று. புகுந்த - மீண்டுவந்த.)

ஒளவையார்.