பக்கம் எண் :


167


தலைவன் வந்திலனென்பது கருத்து. மறை மன்றத்தஃது என்பதனால் இனி, களவொழுக்கம் இயைபுடையதன்றென்பது பெறப்படும்.

    ஏகாரங்கள் அசைநிலைகள். கானலஃது, மன்றத்தஃது: ஆய்தங்கள் விரிக்கும்வழி விரித்தல்.

    (மேற்கோளாட்சி) 2. ஆய்தம் பின் தோற்றிக்கொண்ட புள்ளி (தொல். செய், 18, பேர்.)

    மு. சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்துழித் தலைவி இரங்கிக் கூறியது (தொல். களவு. 20, ந.); மாட்டின்றி வந்த செய்யுள் (தொல். செய். 211, பேர், ந.) ஒரூஉவண்ணம் வந்தது (தொல். செய். 227, பேர். ந.)

    ஒப்புமைப் பகுதி 1. மு. குறுந். 54:1.

    1-2. தலைவி தன் நலனைக் கானலில் இழத்தல்: குறுந். 81: 2-3, ஒப்பு.

    தலைவி நலனிழத்தல்: குறுந். 54: 1-5, 125: 4-7.

    4. அலர் மன்றிற் பரவுதல்: “அலரு மன்றுபட் டன்றே” (அகநா. 201:10): “காமம், மறையிறந்து மன்று படும்”, “என்காமம், மறையிறந்து மன்று படும்” (குறள் 1138, 1254.)

(97)
  
(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)
 98.   
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் 
    
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே  
    
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை  
    
நீர்வார் பைம்புதற் கலித்த  
5
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.  

என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

கோக்குளமுற்றன்.

    (பி-ம்.) 2. ‘துன்னர்ச் சென்று’, ‘துன்னாச் சென்று’

    (ப-ரை.) தோழி-----, நம் படப்பை - நம் தோட்டத்திலுள்ள, நீர் வார் பைம்புதல் கலித்த - நீர் ஒழுகுகின்ற பசிய புதலினிடத்தே தழைத்துப் படர்ந்த, மாரி பீரத்து அலர் சில - மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றை, கொண்டு - கைக்கொண்டு, அவர் துன்ன சென்று -தலைவரை நெருங்கச் சென்று, நல் நுதல் இன்னள் ஆயினள் - நல்ல நெற்றியையுடைய தலைவி இவ்வலரைப் போன்ற பசலையை அடைந்தாள், என்று செப்புநர் பெறின் -