கபிலர். (பி-ம்.) 1. ‘வீழாற்றிக’், ‘வீழித்திக’்; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.
(ப-ரை.) தோழி----, புல் வீழ் இற்றி - புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது, கல் இவர் வெள் வேர் - மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர், வரை இழி அருவியின் தோன்றும் - மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும், நாடன் - நாட்டையுடைய தலைவன், தீது இல் நெஞ்சத்து கிளவி - குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம் வயின் வந்தன்று - நம்மிடத்து வந்தது; நாமும்--, நெய் பெய் தீயின் - நெய்யைப் பெய்த தீயைப்போல, எதிர் கொண்டு - அத்தூதை ஏற்றுக்கொண்டு, தான் மணந்தனையம்என - அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி, தூதுவிடுகம் - தூதுவிடுவேம்.
(முடிபு) தோழி, நாடன் தீதில் நெஞ்சத்துக்கிளவி வந்தன்று; நாமும் எதிர்கொண்டு தூதுவிடுகம்.