மாமூலனார். (பி-ம்.) 1. ‘நெகிழ நாளும்’ 2. ‘பாடில கலுழுமங் கண்ணொடு’ 3. ‘முயங்குவம்’ 4. ‘எழுகினி வாழி நெஞ்சே’, ‘வாழிய நெஞ்சே’, ‘முனாஅது’, ‘முனையது’; 6. ‘வல்வேற்’; 7. ‘தேத்தாராயினும்’; 8. ‘வழிவிடல்’, ‘நட்பே’,
(ப-ரை.) என் நெஞ்சே வாழி-எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ- சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால் நெகிழா நிற்ப, நாள்தோறும் பாடு இல கலிழும் கண்ணொடு- நாள்தொறும் இமை பொருந்துதல்இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு, புலம்பி- தனித்து வருந்தி, ஈங்கு இவண் உறைதல் உய்குவம்- இப்படி இங்கே தங்குதலில் இருந்து தப்புவேமாக; ஆங்கு- தலைவர் இருக்கும் இடத்திற்கு, இனி எழு-செல்லஇப்பொழுது எழுவாயாக; முனாது - முன்னே உள்ளதாகிய, குல்லை கண்ணி-கஞ்சங் குல்லையாலாகிய கண்ணியை அணிந்த, வடுகர் முனையது-வடுகருக்குரிய இடத்தினதாகிய, பல் வேல் கட்டி நல் நாட்டு உம்பர்-பல வேலையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்- மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும், அவருடை நாட்டு-