பக்கம் எண் :


30


    5. வடுகர் முனை: ‘‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர், வல்லாணருமுனை’’ (அகநா.107:11-2.)

    6. பல்வேல்: ‘‘பல்வே லெழினி’’ (குறுந்.80:5); ‘‘பல்வேற் றிரையற் படர்குவி ராயின்’’ (பெரும்பாண். 37); ‘‘பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரின்’’ (குறிஞ்சிப். 129.) கட்டி: ‘‘துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி’’, ‘‘போரடு தானைக் கட்டி’’ (அகநா.44:8, 226:16.)

    7. மொழி பெயர் தேஎம்: ஐங். 321:4; அகநா.67:12, 211:8, 5-7. வடுகர் முனையதாகிய நாடு: ‘‘கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்றம்’’ (நற். 212:5-6); ‘‘வேங்கடத் தும்பர்... இகன் முனைத் தழீஇய வேறுடைப் பெருநிரை, நனைமுதிர் நறவி னாட்பலி கொடுக்கும், வானிணப் புகவின் வடுகர் தேஎத்து’’, ‘‘புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து, நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத், தொடையமை பகழித் துவன்று நிலை வடுகர், பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும், மொழி பெயர் தேஎம்’’ (அகநா. 213:3-8, 295:13-7.)

    மு. ‘‘நாஞ்செலி னெவனோ தோழி... குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே’’ (அகநா.309:12-7.)

(11)
  
(‘தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலளாயினாள்’ என்று கவலை உற்ற தோழி கேட்கும்படி, ‘‘தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்தே யான் வருந்துகின்றேன் என்பதை உணராமல் இவ்வூர், பிரிவை ஆற்றேனாயினேன் என்று வேறொன்றைக் கூறாநின்றது; இஃது என்ன பேதைமை!’’ என்று தலைவி சொல்லியது.)
    
 12.   
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய 
    
உலைக்க லன்ன பாறை யேறிக் 
    
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் 
    
கவலைத் தென்பவவர் சென்ற வாறே 
5
அதுமற் றவலங் கொள்ளாது 
    
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 

என்பது ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஓதலாந்தையார்.

    (பி-ம்.) 2. ‘உலைக்கனலன்ன’ 4. ‘கவலைத்தவர் தேர்சென்ற’, ‘கவலைத்தென்பவவர் தேர்’ 6. ‘நொதுமலர்க் கழறும்’, ‘நொதுமற்கலுழும்’.

    (ப-ரை.) அவர் சென்ற ஆறு-தலைவர் போன வழி யானது, எறும்பி அளையின் - எறும்பின் வளைகளைப் போல, குறுபல் சுனைய- குறுமையை உடைய பலவாகியசுனையை உடைய, உலைகல் அன்ன- கொல்லனது உலைக் களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்