பக்கம் எண் :


225


     “கூழைபெ யெக்கர்” (குறுந். 372:5),

     “்கூந்த னறுமண்” (பெருங். 1.40:28) என்பவற்றைப் பார்க்க.

     ஆண்டும் வருகுவளென்றது ஈண்டு வந்ததையன்றி யென்னும் எச்சப் பொருளைத் தந்தது.

     பெரும்பேதை யென்றாள், கூழை முடியா நிலையிலுள்ள தனக்கு எருமண் வேண்டிற்றிலதாகவும் எம்மொடு வருவாளென்பது கருதி.

     ஊர்க்கு மணித்தே பொய்கை, அப்பொய்கைக்குக் கான்யாறு அருகிலுள்ள தென்றதனால் ‘யாங்கள் வரல்எளிது’ என்பதைக் குறிப்பித்தாள். இங்ஙனம் வருதற் கெளியதாகிய இடத்துத் தனியிடமு முண்டாங் கொலோ வென்னும் ஐயம் நிகழாதபடி யாவதும் துன்னுதல் நீங்கியது அப்பொழில் என்றாள். யாம் வருவது எம் கூழைக்கு எருமண் கொணர்தற் கேயாதலின் யாமும் கான் யாற்றங் கரையிலே நிற்றலன்றிப் பொழிலிற் புகுதோம் என்பதை அறிவித்தாள்.

     “தோழியின் முடியு மிடனுமா ருண்டே” (தொல். களவு. 30) என்னும் விதிபற்றித் தோழி குறியிடங் கூறினாள்.

     ஏகாரங்கள் அசைநிலைகள்.

     மேற்கோளாட்சி 1. உயர்வு சிறப்பும்மை வந்தது (தொல். இடை. 7, கல், ந.)

     2. ஐயவும்மை வந்தது (தொல். இடை . 7, கல்.)

     1-2. ஐயவும்மை வந்தது (தொல். இடை. 7, ந.); நான்காம் வேற்றுமையுருபு இதற்கிது வென்பதுபட வந்தது (நன். 297, மயிலை; இ.வி. 201.)

    மு. பகற்குறி நேர்ந்தது (தொல். களவு. 24, இளம்.); பகற்குறி நேர்ந்து இடங்காட்டியது (தொல். களவு. 23, ந.) நயந்தமை கூறிய தோழி தலைமகற்குக் குறிப்பினாற் பகற்குறியிடங் காட்டியது (களவியற்.)

     ஒப்புமைப் பகுதி 3-4. குருகு குறியிடத்தில் இருத்தல்: குறுந். 25:4-5.

(113)
  
(தலைவியைக் குறியிடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)
 114.   
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி  
    
நின்குறி வந்தனெ னியறேர்க் கொண்க 
    
செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலும் 
    
ஆர லருந்த வயிற்ற 
5
நாரை மிதிக்கு மென்மக ணுதலே. 

என்பது இடத்துய்த்து நீங்குந் தோழி தலைமகற்குக் கூறியது.

பொன்னாகன்.