பக்கம் எண் :


227


     உய்த்தவாறும் உணர்த்தினாள்; செலவியங் கொண்மோ வென்றது நீயே அவளைப் போக விடுவாயாக வென்றதாம்’ (தொல். களவு 24, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. பாவை : குறுந். 48:1, ஒப்பு. 2. தலைவன் தேரூர்ந்து வருதல்;தொல்.பொருள்.

     4-5. ஆரல் அருந்த வயிற்ற நாரை: “பழனப் பன்மீ னருந்த நாரை” (ஐங். 70:1.)

     நாரை ஆரல்மீனை அருந்துதல் : குறுந். 25: 4-5, ஒப்பு: “கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த, ஆர லிரைகருதி நித்தலு நிற்றியால்” (தொல். களவு. 20, ந. மேற்.); “கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீஇய, நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த”, “கழனி யாரல் கவுளகத் தடக்கிப், பழன மருதிற் பார்ப்புவாய்ச் சொரிந்து, கருங்கா னாரை நரன்று வந்திறுப்ப” (பெருங். 3. 4:42-3, 7:29-31.)

  மு.  
“பனியேர் நறுமலர்ப் பாயலிற் கண்வளர் பாவையொரு 
   
 தனியே கிடந்தழுந் தாயுமங் கில்லைத் தடஞ்சிலம்பா 
   
 முனியேல் விடைகொள்வன் முற்றுநின் காவன் முகிணகைசெங் 
   
 கனியே யினியசெவ் வாய்நவ்வி மான்விழிக் காரிகையே” 
   
        (அம்பிகாபதி கோவை, 153)  
(114)
  
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)
 115.    
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே 
    
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு 
    
புலவி தீர வாளிமதி யிலைகவர் 
    
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல் 
5
மென்னடை மரையா துஞ்சும் 
    
நன்மலை நாட நின்னல திலளே. 

என்பது உடன்போக்கு ஒருப்படுத்து மீளுந் தோழி தலைமகற்குக் கூறியது.

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘பெருநன்றாற்றிய’, ‘பெருநன்றொன்றிற’்; 2. ‘புரிமாணாடு’; 3-4. ‘யிலை கவரப் பாடமை பொழுகிய’.

     (ப-ரை.) ஆடு அமை ஒழுகிய -அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண் நறு சாரல் - தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண், மெல் நடை மரையா - மெல்லிய நடையையுடைய மரையா, இலை கவர்பு - இலைகளை விரும்பி உண்டு, துஞ்சும் - துயிலுதற்கிடமாகிய, நல் மலை நாட -நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரு நன்று ஆற்றின் - பெரிய நன்மை யொன்றை ஒருவர் தமக்குச் செய்தால்,