சேய்மையிற் கண்டபோழ்து தோற்றத்தால் இன்பத்தைத் தரும் என்பான் நன்னெறியவ்வே யென்று முதலிலும், நெருங்கும் போழ்து மணத்தால் இன்பத்தைத் தருமென்பான் நறுமை யுடையன வென்றும், பின்னும் நெருங்கி அளவளாவிய போழ்து ஊற்றினாலின்பந் தருமென்பான் தண்ணிய வென்றும் முறையே கூறினான்.
நன்னெறி யவ்வே : வகரம் விரிக்கும் வழி விரித்தது. ஏகாரங்கள் அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 2. சோழர் உறந்தை : அகநா. 93:4-5, 369:13-4, 385: 3-4.
3. மணலின் நெறிப்பு : குறுந். 351:3.
4. கூந்தலின் நெறிப்பு : குறுந். 190:1, 199:4.
1-4. கூந்தலின் நறுமணமும் தண்மையும் : “தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல்” (நற். 137:1)
(116)
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.) 117. | மாரி யாம்ப லன்ன கொக்கின் |
| பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு |
| கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் |
| கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன் |
5 | வாரா தமையினு மமைக் |
| சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே. |
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
குன்றியன் (பி-ம். குன்றியனார்.)
(பி-ம்.) 3. ‘செலீஇ’; 4. ‘கயிறரி பெருந்தீரத் தழுந்துந் துறைவன்’, ‘பெருந்திறத் தழுந்து துறைவன்’.
(ப-ரை.) தோழி---, மாரி ஆம்பல் அன்ன கொக்கின் - மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கினது, பார்வல் அஞ்சிய பருவரல் - பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய, ஈர் ஞெண்டு - ஈரமான நண்டு, கண்டல் வேர் அளை செலீஇயர் - தாழை வேரினிடையே உள்ள வளைக்குட் செல்லும் பொருட்டு, அண்டர் கயிறு அரி எருத்தின் - இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல, கதழும் -