பக்கம் எண் :


232


     ஒப்புமைப் பகுதி 1. கொக்கின் புறத்திற்கு ஆம்பற்பூ : குறுந். 122:1-2: “மாரிக் கொக்கின் கூர லன்ன, குண்டுநீ ராம்பற் றண்டுறை யூரன்”, “கயக்கணக் கொக்கி னன்ன கூம்புமுகைக், கணைக்கா லாம்பல்”, “கொக்கின், கூம்பு நிலை யன்ன முகைய வாம்பல்” நற். 100:2-3, 230:2-3, 280:1-2.)

     2. பார்வல் : மதுரைக். 231; பதிற்.84:5; புறநா.3:19; பெருங்.3. 4:43.

     2-3. நண்டினது கண்டல் வேரளை : “புலவுத்திரை யுதைத்த கொடுந்தாட் கண்டற், சேர்ப்பே ரீரளை யலவன்” (நற்.123:9-10); “கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன், தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம், அலவன்” (அகநா.380:5-7); “கண்டல் வேரளை சேரலவா நீ” (நன்.310, மயிலை. மேற்.)

     நண்டின் வேரளை : குறுந். 328: 1-2, ஐங்.22:1-2, 23:1.

     1-3. கொக்கிற்கு அஞ்சி நண்டு தன் வளையிற் புகுதல் : “வேப்பு நனை யன்ன நெடுங்க ணீர்ஞெண், டிரைதேர் வெண்குரு கஞ்சியயல, தொலித்த பகன்றை யிருஞ்சேற றள்ளற், றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன், நீர்மலி மண்ணளைச் செறியு மூர” (அகநா. 176: 8-12)
(117)
  
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் இருப்ப, தலைவி அவன் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குவாளாய் மாலைப் பொழுதில், “இன்னும் வந்திலர்” என்று கூறி வருந்தியது.)
 118.    
புள்ளு மாவும் புலம்பொடு வதிய் 
    
நள்ளென வந்த நாரின் மாலைப் 
    
பலர்புகு வாயி லடைப்பக் கடவுநர் 
    
வருவீ ருளீரோ வெனவும் 
5
வாரார் தோழிநங் காத லோரே. 

என்பது வரைவு நீட்டித்த வழித் தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.

நன்னாகையார்.

     (பி-ம்.) 3. ‘லடையக’்; 4. ‘வருவிருளிரோ’.

     (ப-ரை.) தோழி---, புள்ளும் மாவும் - பறவைகளும் விலங்கினங்களும், புலம்பொடு வதிய- தனிமையோடு தங்க, நள்ளென வந்த - நள்ளென்னும் ஓசைபட வந்த, நார் இல் மாலை - அன்பில்லாத மாலைக் காலத்தில், பலர் புகு வாயில் - பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை, அடைப்ப - அடைக்க எண்ணி, கடவுநர் - வினாவுவார், வருவீர் உளீரோ எனவும் - உள்ளே வருவீர் இருக்