பக்கம் எண் :


243


தனியே செல்லக் கருதினீராயின், தமியோர்க்கு - தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு, மனை - வீடுகள், இனியவோ - இனிமை தருவனவோ? அல்ல.

     (முடிபு) பெரும, காடு இன்னா என்றிராயின், தமியோர்க்கு மனை இனியவோ?

     (கருத்து) தலைவியையும் உடன்கொண்டு செல்லுதல் வேண்டும்.

     (வி-ரை.) தலைவியை உடன்கொண்டு செல்லவேண்டுமென்று விரும்பிய தோழியை நோக்கித் தலைவன், “யான் செல்லும் வழியிலுள்ள பாலைநிலம் இன்னாமையை யுடையது” என்று கூற அது கேட்ட தோழி கூறியது இது. “பாலை நிலம் இன்னாதென்றீர்: தலைவர் பிரிந்த மனை, மகளிர்க்கு இனிமையைத் தருவனவோ? இன்னாமையை யன்றோ தருவன? இவளைப் பிரிந்து சென்றால் இம்மனை இவளுக்குப் பாலையினும் இன்னாமையை உடையதாகும்; ஆதலின் இவளை உடன்கொண்டு செல்லுதலே நன்று’’ என்று தோழி கூறினாள்.

     உமணர் சேர்ந்து கழிந்த மருங்கினையுடைய காடு, ஊர் பாழ்த்தன்ன காடென இயைக்க. பாழ்த்த ஊரன்ன காடென்று மாறிக் கூட்டினும் பொருந்தும். பாலை நிலத்தில் உமணர் செல்லுதலை, “ நீரி லத்தத் தாரிடை மடுத்த, கொடுங்கோ லுமணர் பகடுதெழி தெள்விளி, நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள வியம்பும்” (அகநா. 17:12-4) என்பதனாலும் அறியலாகும். வறியனவாய்ப் பொலிவழிந்து சிதைந்து கிடக்கும் வீடுகளையுடைய ஊர், பசுமையின்றிப் பொலிவழிந்து நிற்கும் ஓமை மரங்களையுடைய பாலை நிலத்துக்கு உவமை. ஓமையம் பெருங்காடு: அம் சாரியை.

     ‘தமியோர்க்கு மனை இனியவோ’ என்று பொது வகையாற் கூறினா ளேனும் கருதியது தலைவியையேயெனக் கொள்க. இனியவோ வென்ற வினா எதிர்மறைப் பொருளையுடையது. ஏகாரம் ஈற்றசை.

     மேற்கோளாட்சி மு. அடி முதலிற் கூன் வந்த ஆசிரியம் (வீர. யாப்புப். 13); ‘ இதன் முதற்கண் நாலசைச்சீர் வந்ததன்றோவெனின், அஃது ஐஞ்சீரடியாக வைப்பினும் குற்றுகரத்தை ஒற்றாகக்கொண்டு நாற்சீரடியாக வைப்பினும் நாலசைச்சீர் இன்றாம்” (யா. வி . 95); ஆசிரியப்பாவுள் ஐஞ்சீரடி வந்தது) (யா.கா.ஒழிபு.5; இ.வி.745)

     ஒப்புமைப் பகுதி 1. உமணர்: குறுந். 388:4.

     2. ஓமையம் பெருங்காடு: “உவரெழு களரி யோமையங் காட்டு” (நற். 84:8.)

     2-4. “ஊழி யருக்கனும், எரியு மென்ப தியாண்டைய தீண்டுநின், பிரிவி னுஞ்சுடு மோபெருங் காடென்றாள்” (கம்ப. நகர் நீங்கு. 226.)

(124)
  
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி,