பக்கம் எண் :


247


     ஒப்புமைப் பகுதி 1. இளமைபாராது பொருளுக்குப் பிரிதல்: குறுந். 151:6; “இறந்துசெய் பொருளு மின்பந் தருமெனின், இளமையிற் சிறந்த வளமையு மில்லை, இளமை கழிந்த பின்றை வளமை, காமந் தருதலு மின்றே” (நற். 126:7-10.); “வளமையா னாகும் பொருளிது வென்பாய், இளமையுங் காமமு நின்பாணி நில்லா”, “இளமையுந் தருவதோ விறந்த பின்னே” (கலித். 12:11-2, 15:26.)

     3. பெயல்புறந்த முல்லை: “பெய்த புலத்துப் பூத்த முல்லை” (குறுந். 323:4.)

     3-4 முல்லைமுகைக்கு எயிறு: (குறுந். 186:2-3); “மாதரார் முறுவல்போன் மணமௌவன் முகையூழ்ப்ப” (கலித். 27:4.)

     3-5 முல்லைத்தொகுதி நகையைக் காட்டுதல்: குறுந். 162:3-5; “தீந்தள வுகள்செய்யுஞ் சிறுகுறு நகைகாணாய்” (கம்ப. வனம்புகு. 9); “வேள்சரத் துடைகுநர் கோல நோக்கி, இருண்மகள் கொண்ட குறு நகை போல, முல்லையு மௌவலு முருகுயிர்த் தவிழ” (கல். ‘கோடிய கோலினன்’.)

     கார்ப் பருவத்தில் முல்லை முகைத்தல் : குறுந். 108, 162, 186, 188, 220, 221, 358, 382.

(126)
  
(தலைவன் தலைவியின்பால் பாணனைத் தூதாக விட்டுத் தான் பின் நிற்பத் தோழி அவனை நோக்கி, “நின்பாணன் பொய்யனாயினன்; அதனால் பாணர் யாவரும் பொய்யர் போலுமென எண்ணுவே மாயினேம்” என்று கூறி வாயில் மறுத்தது.)
 127.    
குருகுகொளக் குளித்த கெண்டை யயல 
    
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம் 
    
கழனியம் படப்பைக் காஞ்சி யூர 
    
ஒருநின் பாணன் பொய்ய னாக 
5
உள்ள பாண ரெல்லாம் 
    
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே. 

என்பது பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது.

ஓரம் போகியார் (பி-ம். ஓரம் போதியார்.)

     (பி-ம்.) 2. ‘வெருளும்’; 3. ‘கழனியபடப்பை’; 6. ‘நின்ன கன்றிசி’.

     (ப-ரை.) குருகு கொள - நாரை கவர்ந்து கொள்ள, குளித்த - அதன் வாயினின்று தப்பி நீருட் குளித்த, கெண்டை - கெண்டை மீன், பின்பு, அயலது - அயலதாகிய, உரு கெழு தாமரை வான் முகை - நிறம் பொருந்திய தாமரையின் வெள்ளிய அரும்பை, வெரூஉம் - அஞ்சும், கழனி படப்பை - வயற் பக்கங்களையுடைய, காஞ்சி