(கம்ப. ஊர்தேடு. 53) என்பது போன்ற வழக்குகள் உண்டாயின; குறுந்.34, வி-ரை.
புதுக்கோள் யானை - புதியதாகக் காட்டிலிருந்து பிடிபட்ட யானை; தலைவன் தான் முன்னர் இத்தகைய உள்ளக்கவர்ச்சியை அடைந்தவனல்ல னாதலின் புதுக்கோள் யானையை உவமை கூறினான். பிணித்தற்று பிணித் தன்றென்பதன் விகாரம்; பிணித்தல் - இங்கே உள்ளத்தைப் பிணித்தல்.
அத்தை, ஏ: அசைநிலை.
மேற்கோளாட்சி 1. ரகார வீற்று உயர்திணைப் பெயர் விளிவேற்றுமைக்கண் அளபெடுத்தது (நன். 308, மயிலை.) (‘சிறாஅர்’ என்பதை மயிலைநாதர் விளியாகக்கொண்டார் போலும்.)
1-2. னகாரவீற்று உயர்திணைப் பெயர் அண்மை விளிக்கண் ஈறு அழிந்தது (நன். 306, மயிலை, 307, சங்..)
3-5. ‘கடல் போன்றது கூந்தலெனவும், கடல் நடுவெழுந்த எண்ணாட் பக்கத்து மதி போன்றது நுதலெனவும் கூறினான்; அதனால், கடல் போலு மயிரென்றதும், பல காவதப் பரப்புடைய மதிபோன்றது நுதலென்றதும் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற்றீராது மனங்கொள வந்த உவமம் எனவே படும்’ (தொல். உவம. 10, பேர்); எண்ணாட்டிங்கள் மகளிர்நெற்றிக்கு உவமை (சிலப். 2: 38-40, அடியார்); குழவிப் பருவத்து ஒரு கலையுடைத்தாய்ப் பின்பு இளமைப் பருவத்தே நின்ற பிறை, மகளிர் நெற்றிக்கு உவமை (சீவக. 165, ந..)
மு. தலைவன் பாங்கற்கு உற்ற துரைத்தது (இறை. 3; தொல். களவு. 11, இளம், ந; நம்பி. 137); பாங்கன் கேட்பத் தலைவன் கூறியது (தொல். செய். 196, பேர், ந.); பாங்கற் கூட்டம் (தொல். செய். 198, பேர், 201, ந.); தலைவன் பாங்கனை எலுவவென்று விளித்தது (தொல். பொருளியல், 26, ந..)
ஒப்புமைப் பகுதி 2. அத்தை: குறுந். 389:2.
4. பசு வெண்டிங்கள்: குறுந். 359:2; “பசுவெண் ணிலவு” (நற். 196:2.)
3-5. நுதலுக்குப் பிறை: குறுந். 226:2-3.
6. புதுக்கோள் யானை: மணி 12:45, 18:168; பெருங். 1. 33:79.
தலைவனுக்கு யானை: குறுந். 359:4; கலி.2:26-9; மணி. 18:160-68.
5-6. தலைவியின் நுதல் தலைவன் உள்ளத்தைக் கவர்தல்: “ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், நண்ணாரு முட்குமென்பீடு” (குறள், 1088.)
(129)
(தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் இவ்வுலகில் எங்கேனும் ஓரிடத்தில் இருப்பார்; அவரைத் தேடித் தருவேன்” என்பதுபடத் தோழி கூறியது.)