பக்கம் எண் :


258


     ‘கன்று பசுவைப் பார்த்திருத்தலைப் போன்ற விருப்புடையளாதலினாலும், மனங்கவரும் இயல்பினளாதலினாலும் அவளை மறந்து அமைதல் அரிது’ என்று தலைவன் கூறினான். ஈன்றணிமையையுடைய நடுங்குதலைக்கன்றைத் தலைவிக்கு உவமை கூறினான், அணிமையிலே முதன்முதற் கண்டு நெஞ்சு கலந்தவனாதலின்.

     தலைவனுக்குப் பசுவையும் தலைவிக்குக் கன்றையும் உவமை கூறும் மரபு இந்நூல் 94-ஆம் செய்யுளாலும் அதன் விசேடவுரை முதலியவற்றாலும் விளங்கும்.

     மேற்கோளாட்சி 2. கொடியென்பது நீடலென்னும் பொருளில் வந்தது. (தொல். புறத். 33. ந..)

     மு. களவுக் காலத்து நிகழ்ந்த கூட்டத்து அருமையைத் தனித்துச் சுழலுதலையுடைய உள்ளத்தோடே உசாவிய விடத்துத் தலைவற்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, ந..)

     ஒப்புமைப் பகுதி 1. தலைவி தழுவுதல்: “இன்னகை யிளையோள் கவவ” (அகநா. 314:21)

     தலைவியின் கவவுக் கடுமை: ‘நம் கவவுக் கடுமை யறிந்த தலைவர்’ (குறள். 1156, பரிமேல்.)

     4. கடுஞ்சுரையான் : பு.வெ. 18.

     6. மாயோள்: குறுந். 9:1, ஒப்பு.

     4-6 தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவிக்குத் தாய்ப் பசுவை எதிர்பார்க்கும் கன்று: குறுந். 64:1-4.

(132)
  
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுங்காலம் இருந்தானாக, வருந்திய தலைவி, “என் நலத்தை இழந்தும் தலைவர் வரைவாரென்னும் கருத்தினால் இன்னும் உயிர்தாங்கி நிற்கின்றேன்” என்று கூறியது.)
 133.   
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை 
    
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி 
    
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென் 
    
உரஞ்செத்து முளெனே தோழியென் 
5
நலம்புதி துண்ட புலம்பி னானே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் சொல்லியது.

உறையூர் முதுகண்ணன் சாத்தன்.

     (பி-ம்.) 1. ‘றொடவைகப’், ‘சிறுதினைக்’; 3-4. ‘ஒலித்தாங்கெண்ணுரஞ்’; 4. ‘உள்ளேன்றோழி’; 5. ‘நலம்புத்துண்ட’.

     (ப-ரை.) தோழி---, புனவன் துடவை - குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த, பொன்போல் சிறுதினை - பொன்னைப் போன்ற சிறிய தினையினது கதிரை, கிளி