கோவேங்கைப் பெருங்கதழ்வன். (பி-ம்.) 2. ‘நன்றுமற்றில்லை’, ‘நன்று மாறில்ல’; 4. ‘பூவிடை’; 5. ‘பொரு திலங்கும்',‘கதம் வீழருவி’.
(ப-ரை.) தோழி---, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக; குறு பொறை தடைஇய - குறிய கற்களினிடத்தே பருத்து வளர்ந்த, நெடு தாள் வேங்கை - உயர்ந்த அடியையுடைய வேங்கை மரத்தினது, பூ உடை அலங்கு சினை - மலர்களையுடைய அசைந்த கிளைகள், புலம்ப - அம் மலர்களை நீங்கித் தனிக்கும்படி, தாக்கி - அடித்து, கல் பொருது - கற்களை அலைத்து, இரங்கும் - ஒலிக்கும், கதழ் வீழ் அருவி - விரைந்து வீழும் அருவியானது, நிலம் கொள்பாம்பின் - நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப்போல, இழிதரும் - இறங்குதற்கிடமாகிய, விலங்குமலை நாடனொடு - ஒன்றற் கொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு,