வினையே: ஏகாரம் பிரிநிலை. வினையே யென்பதன் ஏகாரத்தை ஆடவரென்பதற்கும் கூட்டி முடிக்க. உயிரே: ஏகாரம் அசை நிலை. மனை யுறை மகளிர் - மனையிலிருந்து கற்பொழுக்கம் தவறாத மகளிர். உடலுள் ளளவும் முயற்சியுடன் இருத்தல் ஆடவர்க்கு இலக்கணமாதலின் அவர்க்கு வினை உயிரென்றும், கணவரைப் பிரிதலின்றி வாழ்வதே மகளிர்க்கு இலக் கணமாதலின் அவருக்கு ஆடவர் உயிரென்றும் கூறினான். நமக்கென்றது தனக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமைபற்றி. உரைத்தோரு மென்ற உம்மை இப்பொழுது பிரிவதற்குரிய முயற்சியைச் செய்வோரும் என்று எதிரதுதழீஇயது. தாமே: ஏகாரம் தேற்றம்.
அழுங்குவர் - தவிர்வர்; ‘செலவழுங்கினார் - செலவு கெடுத்தார்’ (தொல். உரி. 53, இளம்.) செலவே: ஏ அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1. வினை ஆடவர்க்கு உயிர்: “வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி” (அகநா. 33:1); “இன்பம் விழையான் வினைவிழைவான்றன்கேளிர், துன்பந் துடைத்தூன்றுந் தூண்” (குறள். 615.)
2. மகளிர்க்கு ஆடவர் உயிர்: “இன்னுயி ரன்ன பிரிவருங் காதலர்’ (நற். 237:3); “ஆடவ ருயிரென வருகு பேயினார்”, “ஐயா நீயென தாவி யென்பது, பொய்யோ பொய்யுரையாத புண்ணியா”, “பொருடரப் போயினர்ப் பிரிந்த பொய்யுடற், குருடரு தேர்மிசை யுயிர் கொண்டுய்த்தலான்”, “விழைவுறு பொருடரப் பிரிந்த வேந்தர்வந், துழையுறவுயிருற வுயிர்க்கு மாதரின்” (கம்ப. எழுச்சிப். 22, அரசியற். 9,. கார்காலப். 22, 25.)
4. அழாஅல்: குறுந். 8:2; “ஆழன் மடந்தை யழுங்குவர் செலவே” (நற். 391:1.)
(135)
(“நீ காம நோயுறல் தகாது” என்று பாங்கனை நோக்கித் தலைவன், “காமம் யாவரிடத்தும் இயல்பாக உள்ளதே; ஆயினும் அது வெளிப்படற் குரியதொரு காலத்தை யுடையது” என்று கூறியது.) 136. | காமங் காம மென்ப காமம் |
| அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக் |
| கடுத்தலுந் தணிதலு மின்றே யானை |
| குளகுமென் றாண்மதம் போலப் |
5 | பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே. |
என்பது தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
மிளைப்பெருங் கந்தன்.
(பி-ம்.) 3. ‘தணித்தலும்’; 4. ‘றாள் பதம’்.
(ப-ரை.) காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; காமம் - அக்காமமானது, அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும், பிணியும் அன்று - நோயும் அன்று; நுணங்கி - நுண்ணிதாகி, கடுத்