பக்கம் எண் :


269


     மு. இரவுக்குறி பிழைத்த விடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 16, ந.); என் பிழைப்பு அன்றென்று இறைவி நோதல் (நம்பி. 160: இ.வி. 519); தூங்கிசை யகவலோசை ஆசிரியப்பா(யா. வி. 69.)

     ஒப்புமைப் பகுதி 1. ஊர் துஞ்சினும் தலைவி துயிலாமை: குறுந். 6:3-4, ஒப்பு.

     2. எழில்:நற். 391:7, அகநா. 152:13, 345:7, 349:9.

     3. நொச்சியின் இலைக்கு மயிலின் அடி: “மயிலடி யிலைய மாக்குர னொச்சி”, “மயிலடி யன்ன மாக்குர னொச்சியும்” (நற். 115:5, 305:2);“நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை” (திருவிளை. இந்திரன். 74.)

     3-4. நள்ளிரவில் நொச்சிப்பூ உதிர்தல்: ‘‘நொச்சி மென்போது வீழு மிருளின்’’ (கூர்ம. இராமன்வனம். 62.)

     3-5. நள்ளிரவில் நொச்சிப்பூ வீழ்தலைக் கேட்டல்: “ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன், மாறினெ னெனக்கூறி மனங் கொள்ளுநதானென்ப, கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப், பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக” (கலி. 45:10-13); “வியலூ ரெயிற்புற நொச்சியி னூழ்மலர் வீழ்தொ றெண்ணி, மயலூர் மனத்தொடு வைகினன் யான்றஞ்சை வாணன் வெற்பர், புயலூ ரிருட் கங்குல் வந்தவ மேநின்று போயினரென், றயலூர் கைக்குமென்னேயென்ன பாவங்கொ லாக்கினவே” (தஞ்சை. 201); “நொச்சிப் புதுமலர் வீங்கிருள் வீழ்வன நோக்குதுமே” (தணிகை. களவு. 575.)

(138)
  
(பரத்தையர் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் பரத்தையர் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வாரற்க” என்று கூறியது.)
 139.   
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை 
    
வேலி வெருகின மாலை யுற்றெனப் 
    
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய 
    
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் 
5
கின்னா திசைக்கு மம்பலொடு 
    
வாரல் வாழிய ரையவெந் தெருவே. 

என்பது வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.

ஒக்கூர் மாசாத்தியார்.

     (பி-ம்.) 3. ‘புகுவிடன்’, ‘குழீஇப’்; 4. ‘கிளிப்பயிர்ந’், ‘கிளைப்பயிர்ந’்.

     (ப-ரை.) ஐய---, மனை உறை கோழி குறுகால் பேடை -இல்லின்கண் உறைகின்ற கோழியினது குறிய காலையுடைய பேடையானது, வேலி வெருகு இனம் - வேலிக்கு அயலில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம்,