மு. 1 ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்க்குங்கால் தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது(தொல். கற்பு. 9, இளம்.); ‘இதனுள் அம்பலொடு வாரலெனவே, பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டா ரென்றலிற் புறம்போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று’. (தொல். கற்பு. 9, ந..)
ஒப்புமைப் பகுதி 1. மனையுறைகோழி: “மனைவா ழளகு”, “மனையுறை கோழியோடு” (பெரும்பாண். 256, 299); “மனையளகு” (திருவள்ளுவ. 5.)
2. வேலிவெருகு: “ஈர்முள் வேலிப் புலவுநாறு முன்றில், எழுதியன்ன கொடிபடு வெருகின், பூளை யன்ன பொங்குமயிர்ப் பிள்ளை” (அகநா. 297:12-4.)
1-2. வெருகு மாலைக் காலத்திற் கோழியைக் கவர்தல்: “குவியடி வெருகின் பைங்க ணேற்றை, ஊனசைப் பிணவி னுயங்கு பசிகளை இயர், தளிர்புரை கொடிற்றிற் செறிமயி ரெருத்திற், கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன, நெற்றிச் சேவ லற்றம் பார்க்கும், புல்லென் மாலையும்” (அகநா. 367:8-12.)
4. பிள்ளை: குறுந். 46:5, 92:4.
1-4. வெருகினை யஞ்சி, கோழிப் பேடை ஒலித்தல்: “ஊர்முது வேலிப் பார்நடை வெருகின், இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை, உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற” (புறநா. 326:1-3.)
(139)
(தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்தில் அவனுடைய பிரிவினால் துன்புற்ற தலைவியை நோக்கி, “நீ ஆற்றாமல் இருக்கின்றாய்” என்று தோழி இரங்கினாளாக, “இவ்வூர் இப்பொழுது யான் டுந்துன்பத்தை எங்ஙனம் அறிந்தது?” என்று முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறியது.) 140. | வேதின வெரிநி னோதி முதுபோத் |
| தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும் |
| சுரனே சென்றனர் காதல ருரனழிந் |
| தீங்கியான் றாங்கிய வெவ்வம் |
5 | யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. |
என்பது பொருள்வயிற் பிரிந்தவிடத்து, நீ ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அள்ளூர் நன்முல்லை. (பி-ம்.) 2. ‘புட்கொளப்போதும’்; 4. ‘யானழுங்கிய’; 5. ‘ஆங்கறிந’்.
1. | பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனைத் தானொழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டிப் புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக்காத்த தன்மையினாலே கண்ணோட்டமின்றி நீக்குதல் (ந.) |