(பி-ம்.) 1.’விளை தினை கடியாச’், ‘விழைதினை கடியச’்; 2. ‘செல்கின்றோளே’, ‘அன்னை சேணெனச’்; 3. ‘னெவனாந’்;5. ‘கொலைவலேற்றை’; 6. ‘படுமதரம’்; 8. ‘னாடநீ வாரலோ’.
(ப-ரை.) தோழி---, சாரல் நாட - மலைப்பக்கத்தையுடைய நாட, கொல்லை - கொல்லையிலுள்ள, நெடு கைவல் மான் - நெடிய கையையுடைய யானையினது, கடுபகை உழந்த - கடிய பகையினால் வருந்திய, குறு கை இரு புலி கோள் வல் ஏற்றை - குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது, பசுகட் செநாய் - பசிய கண்ணையுடைய செந்நாய், படுபதம் பார்க்கும் - அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும், அரு இருள் நடுநாள் வருதி - வருதற்கரிய இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்; வாரல் என - அங்ஙனம் வருதலை ஒழிவாயாக எனவும், வளைவாய் சிறுகிளி - வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை, விளைதினை கடீஇயர் - விளைந்த தினையினிடத்துப் படாமற் கடியும் பொருட்டு, அன்னை - நம் தாய், செல்க என்றாள் - செல்வீராக