பக்கம் எண் :


281


     5. பரல் பாழ்படுத்தல்: “பரற்பகை யுழந்த நோயொடு சிவணி” (பொருந.44.); “பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல், விரனுதி சிதைக்கு நிரைநிலை யதர, பரன்முரம் பாகிய பயமில் கானம்” (அகநா. 5:13-5); “பரல்வடுப் பொறிப்ப” (பெருங். 2:9:162.)

     6. விண்ணுயர் பிறங்கல் மலை: “வானுயர் பிறங்கன்மலை” (குறுந். 285:8.)

     விலங்கு மலை நாடு: குறுந். 134:7.

(144)
  
(தலைவன் வரைபொருட்குப் பிரிந்து நீட்டிப்ப அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு உறைபதி யன்று” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)
     145.   
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி் 
    
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி் 
    
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாட் 
    
டுஞ்சா துறைநரொ டுசாவாத் 
5
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.் 

என்பது வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

கொல்லனழிசி.

    (பி-ம்.)1.’சிறுகுடிக’்;4.’துறைநரொடு சார்வாத’்.

     (ப-ரை.)இ துறைகெழு சிறுகுடி - கடற்றுறை பொருந்திய இந்தச் சிற்றூர், கானல் அம் சேர்ப்பன் - கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது, கொடுமை எற்றி - கொடுமையை நினைந்து, ஆனா துயரமொடு - மிகுகின்ற துன்பத்தோடு, வருந்தி - துயரமுற்று, பானாள் - நடுயாமத்தில், துஞ்சாது உறைநரொடு - துயிலாமல் தங்குவாரை, உசாவா - ஏனென்று வினாவாத, துயில்கண் மாக்களொடு - துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு, நெடு இரா உடைத்து - நெடிய இரவை உடையது, ஆதலின், உறைபதி அன்று - இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.

     (முடிபு) இச்சிறுகுடி துயிற்கண் மாக்களொடு நெட்டிராவுடைத்து; உறைபதியன்று.

     (கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.

     (வி-ரை.) “புல்வேய் குரம்பை, ஊரென வுணராச் சிறுமை” (அகநா. 200: 2-3) யுடைத்தாதலின், சிறுகுடியென்றாள். கொடுமை - பிரிவின் கண் நீட்டித்தல்; (குறள்.1169, பரிமேல்.) எற்றி - நினைந்து