பக்கம் எண் :


282


(தொல். உரி.39.) துஞ்சாதுறைநரென்று தலைவி தன்னையே பிறர் போலக் கூறினாள்; (குறள்,1154, பரிமேல்.) உறைநரொடு : உருபு மயக்கம். உசாவாவென்றது உசாவித் தன் துயர் நீங்குதற்கு ஆவனவற்றைச் செய்யாத என்பதாம். தோழி மறை வெளிப்படுத்துக் கொண்டு மேல் அறத்தொடு நிற்றற் பொருட்டுத் தலைவி கூறுவன கேட்டற்குப் பொய்த்துயில் கொள்வா ளாதலின் ‘துயிற்கண்மாக்கள்’ என்றாள். மாக்களென்றது இங்கே தோழியை; தன் ஆற்றாமை அறியும் வன்மையில்லாமை பற்றி இங்ஙனம் கூறினாள். கணவனைப் பிரிந்தவர்க்கு இராப்பொழுது பண்டையினெடியதாகத் தோற்றுதல் இயல்பாதலின் நெட்டிரா வென்றாள்; “ஊழியிற் பெரிதா னாழிகை யென்னும்” (திவ். பெரிய திரு. 2. 7:4.) ஏகாரம் : அசை நிலை.

     மேற்கோளாட்சி 2. எற்று என்னும் சொல் நினைவென்னும் பொருளில் வரும் (தொல். உரி. 41.சே, தெய்வச், 39, ந; இ.வி.282.)

     மு. தலைவனோடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாத வழித் தனது ஆற்றாமையால் தன்னோடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தலைவி தானே கூறுதலும் உள (தொல். களவு. 20, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. தலைவன் கொடுமை:குறுந். 9:7, ஒப்பு; அகநா.398:7:குறள்,1169.

    3.தலைவி துஞ்சாமை: குறுந். 6:4,ஒப்பு.

     5. மாக்கள்:குறுந். 6:2, ஒப்பு.

     நெட்டிரா: “கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நாள், நெடிய கழியு மிரா” (குறள்,1169.)

    4-5. தலைவி துஞ்சாமையும் பிறர் துயிலலும்:குறுந்.6: 1-2, ஒப்பு.

(145)
  
(தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நமர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)
 146.    
அம்ம வாழி தோழி நம்மூர்ப 
    
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ 
    
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் 
    
நன்றுநன் றென்னு மாக்களோ 
5
டின்றுபெரி தென்னு மாங்கண தவையே. 

என்பது தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி வரைவு மறுப்பவோ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

    (தலைமகள் தமர் வரைவு மறுத்தல்: இறை.29, உரை.)

வெள்ளிவீதியார்.

     (பி-ம்.) 2. ‘புணர்பவ’, ‘புணர்ப்பவ’.