ஒளவையார். (பி-ம்.) 3. ‘நல்லூர்க்’ 6. ‘தொடுவளை முன்கை நம்’
(ப-ரை.) தோழி-, ஆய்கழல்-அழகிய வீரக் கழலை யும், செ இலை-செம்மையாகிய இலையை உடைய, வெள்வேல்- வெள்ளிய வேலையும் கொண்ட, விடலையொடு- தலைவனோடு, தொகுவளை முன்கை-பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன் கைகளை உடைய, மடந்தை நட்பு- நின்மகள் செய்த நட்பானது, தொல் முது ஆலத்து பொதியில்-மிகப்பழைய ஆல மரத்தடியின் கண் உள்ள பொதுவிடத்தில், இறைகொள்பு தோன்றிய-தங்குதலைக் கொண்டு தோன்றிய, நாலூர் கோசர் நன்மொழி போல- நான்கு ஊரில் உள்ள கோசரது நன்மையை உடைய மொழி உண்மையாவதைப் போல, பறை பட-