மேற்கோளாட்சி 1. இனியென்பது பின்வருங்காலம் உணர்த்தி நின்றது (தொல். எச்ச. 67, ந.)
1-2. இனியென்பது காலத்தின்மேல் முன்னென்னும் பொருள்பட வரும் (நன். 420, மயிலை.) 6. தலைவி தோழிக்கு நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்தும் (தொல். களவு. 19, ந.)
மு. நொதுமலர் வரைவின்கண் தலைவி நாணழிபிரங்கிக் கூறியது (தொல். களவு. 23, இளம்.);
இக்குறுந்தொகை தலைவி நாண் நீங்கினமை கூறியது (தொல். அகத். 42, ந.); இஃது உடன்போக்கு வலித்தமையின் தலைவி நாண் துறந்து கூறியது (தொல். களவு. 16, ந.); தலைமகள் உடன்செல நேர்ந்த பாவக்கிளவி(தமிழ்நெறி. 20); தலைவி உடன்போக்கின்கண் நாணழிந்து வருந்தல் (இறை. 23); உடன்போக்கு நயப்பித்த தோழி தலைமகளுழைச் சென்றுணர்த்தத் தலைமகள் சொல்லுதல் (களவியற் காரிகை); தலைவி நாணழி பிரங்கல் (நம்பி. 182.)
ஒப்புமைப் பகுதி 1-2. நாண் அளிது: “என் கண்மணிபோன், றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த, அருநா ணளிய தழல்சேர் மெழுகொத் தழிகின்றதே” (திருச்சிற். 44.)
நாண் நனிநீடுழந்தன்று: “சேணு மெம்மொடு வந்த, நாணும் விட்டே மலர்கவிவ் வூரே” (நற். 15: 9-10); “நாணோ டுடன்பிறந்த நான்” (முத். 98.)
1-6. காமமும் நாணமும்: குறுந். 112:2, ஒப்பு.
காமத்தால் நாண் அழிதல்: “மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காம நண்ணி”, “காமங் கைம் மிகச் சிறத்தலி னாணிழந்து” (அகநா. 208: 18-20, 266:8.)
மு. “ஏணு மிகலு மழிந்துதெவ் வேந்தரெல் லாமிறைஞ்சக், காணுங் கழனெடு மாறன்செங் கோனின்று காக்குமண்மேற், சேணு மகலாதுட னென்னொ டாடித் திரிந்துவந்த, நாணு மழியத் தகுகற்பு மேம்பட நைகின்றதே” (பாண்டிக்கோவை.)
(149)
(தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவிக்கு அதனைத் தெரிவிப்ப, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; புல்லினால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தன் உடம்பாட்டைத் தெரிவித்தது.) 150. | சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி |
| வான மீனின் வயின்வயி னிமைக்கும் |
| ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம் |
| உள்ளி னுண்ணோய் மல்கும் |
| புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய். |
என்பது இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.