பக்கம் எண் :


291


     கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 27, ந.); தலைமகள் இரவுக்குறி நேர்ந்து பாங்கியொடுரைத்தது(நம்பி. 158.)

     ஒப்புமைப் பகுதி 1. சேணோன்: “சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பு” (மதுரைக். 294); “கழுதிற் சேணோன்” (மலைபடு. 243); “சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதின்” (நற். 276:5); “ஏனலஞ் சிறுதினைச் சேணோன் கையதைப், பிடிக்கை யமைந்த கனல்வாய்க் கொள்ளி”, “கல்லுயர் கழுதிற் சேணோன்” (அகநா. 73: 14-5, 392:14); “கலிகெழு மீமிசைச் சேணோ னோதையும்” (சிலப். 25:30.)

     (கு-பு. பலவிடங்களிலுமுள்ள ஆட்சியை நோக்கும்போது சேணென்பது ஆகுபெயர் வகையாற் பரணுக்கே உரிய பெயராக வழங்கிய தென்று தோற்றுகின்றது.)

     ஞெகிழி மாட்டல்: “நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டி” (மலைபடு. 446.)

     சேணோன் மாட்டிய ஞெகிழி: (குறுந். 357: 5-6); “கானவனெறிந்த கடுஞ்செலன் ஞெகிழி” (நற். 393:5.)

     3. தலைவன் சந்தனம் பூசி வருதல்: குறுந். 161:6, 198:7, 321:1; கலி.52:7, 15.

     4. உள்ளின் உண்ணோய் மல்கும்: குறுந். 102:1.

     5. எவன் கொலன்னாய்: ஐங். 21:4, 30:4, 216:6, 217:4, 219:4. தோழியைத் தலைவி அன்னை யென்றல்: குறுந்.33:1.

(150)
  
(பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்” என்று கூறித் தலைவன் வருந்தியது.)
 151.   
வங்காக் கடந்த செங்காற் பேடை 
    
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது 
    
குழலிசைக் குரல குறும்பல வகவும் 
    
குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது 
5
மறப்பருங் காதலி யொழிய 
    
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. 

என்பது பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

தூங்கலோரி.

     (பி-ம்.) 1. ‘வங்கர்கடந்த’, ‘கடிந்த’, ‘கிடந்த’; 2. ‘விழந்தெனக்’; 3. ‘குறும்பல மிகவும்’; 4. ‘குன்றுறு’; 6. ‘டின்மைக்கு’.

     (ப-ரை.) நெஞ்சே-, வங்கா கடந்த - ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த, செ கால் பேடை -