மதுரைச் சீத்தலைச் சாத்தன். (பி-ம்.)3.‘லுன்னிப்’; 5. ‘பொரிக்காற்’.
(ப-ரை.) தோழி-, பாம்பின் உரி நிமிர்ந்தன்ன - பாம்பினது உரி மேலெழுந்தாற் போன்ற, உருப்பு அவிர் அமையத்து - கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில், இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற ஆண் பறவையை நினைந்து, பொறி மயிர் எருத்தின் - புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுநடை - குறுக அடியிடும் நடையினையும் உடைய, பேடை - பெண்புறாவானது, பொரி கால் கள்ளி -