3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)
ஒப்புமைப் பகுதி 2. நாரென்பது பட்டைக்கு வருதல்: குறுந். 112:4, 274:5.
4. படிவவுண்டிப் பார்ப்பன மகன்: "படிவப் பார்ப்பான்" (முல்லைப். 37.)
6. பிரிந்தோர்ப் புணர்த்தல்: குறுந். 146:2.
(156)
(பூப்பு எய்திய தலைமகள் அதனை மறைத்துக் கூறுவாளாய், “வைகறை வந்தது; இனித் தலைவனைப் பிரியநேருமென்று அஞ்சுகின்றேன்” என்று சொல்லியது.) 157. | குக்கூ வென்றது கோழி யதனெதிர் |
| துட்கென் றன்றென் றூய நெஞ்சம் |
| தோடோய் காதலர்ப் பிரிக்கும் |
| வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. |
என்பது பூப்பெய்திய தலைமகள் உரைத்தது.
அள்ளூர் நன்முல்லை (பி-ம். அள்ளூர் நன்மூலன்.) (பி-ம்) 2. ‘றற்றென்’, ‘றூஉய’; 4. ‘வான்போல்’.
(ப-ரை.) கோழி-, குக்கூ என்றது - குக்கூவென்று கூவியது; அதன் எதிர் - அதற்கு நேரே, தோள் தோய்