பக்கம் எண் :


302


காதலர் பிரிக்கும் - எனது தோளை மணந்த தலைவரைப் பிரியச்செய்யும், வாள்போல் - வாளைப்போல, வைகறை வந்தன்று என - விடியற் பொழுது வந்ததென்று, என் தூய நெஞ்சம் - எனது மாசற்ற நெஞ்சம், துட்கென்றன்று - அச்சத்தை யடைந்தது.

    (முடிபு) கோழி குக்கூவென்றது; நெஞ்சம், துட்கென்றன்று.

    (கருத்து) தலைவனை இனிப் பிரிந்திருத்தல் வேண்டுமென்று அஞ்சுகின்றேன்.

    (வி-ரை.) "அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்" என்பது விதியாதலின் தலைவிதான் பூப்பெய்தியதை வெளிப்படையாகக் கூறாதொழிந்தாள். துட்கென்றன்று - துட்கென்றது; துட்கு - அச்சம். தலைவனோடு ஒன்றுபட்டுப் பிறிதொரு நினைவின்றி யமைந்ததாதலின் தூய நெஞ்சாயிற்று.

    பூப்புக்காலமாகிய மூன்றுநாளும் தலைவியினதுசொற்கேட்கும் அணிமையிலிருத்தலையன்றி அளவளாவுதல் அறநெறியன்றாதலின் பூப்பு, தலைவனைத் தோள் தோயாமற் பிரிப்பதாயிற்று;

  
‘முந்நாளுங் கூடி உறையப் படுங் குற்றமென்னோவெனின் பூப்புப்  
  
 புறப்பட்டஞான்று நின்ற கரு வயிற்றில் அழியும்; இரண்டாம் நாள் 
  
 நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நின்ற கரு குறுவாழ்க் 
  
 கைத்தாம்; வாழினுந் திருவின்றாம். அதனாற் கூடப்படா தென்பது;  
பூப்புமுதன் முந்நாட் புணரார் புணரின் 
யாப்புறு மரபி னையரு மமரரும் 
யாத்த கரண மழியு மென்ப 

எனப் பிறரும் ஓதினாராகலான் அமையாதென்பது’ (இறை. 43. உரை) என்பதனால் பூப்புநாட்களிற் கூட்டமின்மை உணரப்படும்.

    ஆல், ஏ: அசைநிலைகள்.

    (மேற்கோளாட்சி) மு. தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும் வழிக் கூற்று நிகழும் (தொல். கற்பு. 6, இளம்.) முந்நாட்பிரிவாகிய பூப்பிடைப் பிரிவு வந்துழித் தலைவி கூறியது (தொல். களவு. 31, ந.) ‘பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளுங் கருத்தங்கின் அது வயிற்றில் அழிதலும், மூன்றாம் நாள் தங்கின் அது சில்வாழ்க்கைத்தாதலும் பற்றி முந்நாளுங் கூட்டமின்றென்றார்... குக்கூ என்பதனைக் காட்டுவாரு முளர்’ (தொல். கற்பு.46, ந.)

    ஒப்புமைப் பகுதி 3. தோள் தோய் காதலர்: குறுந்.323:6.

    4. வாள் போல் வைகறை: குறள், 334.

(157)
  
(தலைவன் இரவுக்காலத்தில் வந்து அளவளாவுங்காலத்து ஒரு நாள் பெருமழை உண்டாயிற்றாக, அவனது வரவுக்குத் தடை நிகழுமோவென அஞ்சிய தலைவி அவ்வச்சத்தைத் தலைவன் வந்த பின்னர் அம்மழையை நோக்கிக் கூறுவாளாய் அவன் கேட்பக் கூறியது.)