பக்கம் எண் :


304


    இடிமுழக்கம், பெருங்காற்று முதலியவற்றோடு வந்த மழையினால் தலைவனுக்கு வரும் ஏதங்குறித்து அஞ்சுதலையன்றித் தம் மெல்லியல் பாலும் பெண்டிர் அஞ்சுவராதலின் ‘அளியர்’ என்றாள். பெண்டிரென்று பொதுவகையாற் கூறினும் கருதியது தன்னையே என்க.

    துணையிலரளியரென்றமையின், துணையுளராயின் அஞ்சாரென்பதாம். இஃதென்றது அளியின்மையை.

    (மேற்கோளாட்சி) 3. கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது (தொல். உரி. 58, இளம். 59, சே. தெய்வச்.)

5-6.     ‘மலையைத் துளக்கும் ஆற்றலையுடையாய், காமப்பிணி கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவதன்று’ என இளிவந்து வாடைக்குக் கூறினமையின், இது தன்கட்டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது (தொல். மெய்ப். 6, பேர்.; இ.வி.578.)

    ஒப்புமைப் பகுதி 1-2. பாம்புபட இடிக்கும் உருமு: குறுந். 190;4-5, 268; 3-4, 391;3-4; “நாகத், தணங்குடை யருந்தலை யுடலி வலனேர், பார்கலி நல்லேறு திரிதரும்”, ஈர்ங்குர லுருமி னார்கலி நல்லேறு, பாம்பு கவினழிக்கும்”, “கேழ்கிளருத்தி யரவுத்தலை பனிப்பப், படுமழை யுருமினுரற்று குரல்”, “திருமணி யரவுத்தேர்ந் துழல, உருமுச்சிவந் தெறியுமோங்குவரை யாறே” (நற். 37:8-10, 114:9-10, 129:7-8, 255:10-11); “உருமுச்சிவந்தெறிந்த வுரனழி பாம்பின்”, “பாம்பின், பைபட விடிக்குங் கடுங்குர லேற்றொடு” (அகநா. 92:11, 323:10-11); “இடியே றுண்ட நாகம் போல” (பெருங். 2. 10:112.)

    3. காலொடு வந்த மழை: “காலொடு பட்ட மாரி” (நற். 2:9); “காற்றுடைக் கனைபெயல்” (கலி. 45:4.)

    கமஞ்சூன் மாமழை: முருகு. 7.

    3-4. மழைக்கு அளித்தன்மையுண்மையைக் கூறுதல்: குறுந். 216: 5-6.

    1-5. மழை பாம்பை வருத்தி மலையைத் துளக்குதல்: “யாங்குச்செய் வாங்கொ றோழி யோங்குகழைக், காம்புடை விடரகஞ் சிலம்பப் பாம்புடன், றோங்குவரை மிளிர வாட்டி வீங்குசெலற், கடுங்குரலேற்றொடு கனைதுளி தலைஇப், பெயலா னாதே வானம்”, “முழங்குகடன் முகந்த கமஞ்சூன் மாமழை, மாதிர நனந்தலை புதையப் பாஅய், ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு” (நற். 51:1-5, 347:1-3.)

    மழை மலையைத் துளக்குதல்: “பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைபெயல்” (கலி. 45:4.)

(158)
  
(தலைவன் கேட்கும் அணிமையிலே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.)