பக்கம் எண் :


40


(தொல்.புறத்.35, ந.மேற்.) என்பதையும் பார்க்க. செப்பம் என்றது இங்கே கூர்மையை, பலகாலும் வழிப்போவாரை எய்து மழுங்கியதாதலின் அம்பு செப்பங்கொள்ள வேண்டுவதாயிற்று; ‘‘கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்’’ (குறுந்.12:3) என்று முன்னும் கூறப்பட்டது. பயிர்தல் - அழைத்தல்; ‘‘புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும், அத்தம்’’ (குறுந்.79:4-5.) அங்காற்கள்ளி என்றாள், அகில் உண்டாதலின்; ‘‘அகில்படு கள்ளியங் காடிறந் தோரே’(ஐங். அதிகப்பாட்டு) பாலை நிலத்தில் உள்ள கள்ளியில் பல்லி இருந்து ஒலிக்கும் செய்தி,

  
‘‘கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க் 
  
 குறுவது கூறுஞ் சிறுசெந் நாவின் 
  
 மணியோர்த் தன்ன தெண்குரற் 
  
 கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே’’        (அகநா. 151:12-5) 

     பல்லி தன் துணையை அழைக்கும் பாலை நிலத்தில் செல்பவர் அது கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்; ஆதலின் நீ ஆற்றி இருப்பாயாக என்பது குறிப்பு.

     ஒப்புமைப் பகுதி1. உள்ளார்கொல்லோ தோழி: குறுந். 67:1, 232:1; நற். 241:1; ஐங். 456:1, அதிகப்பாடல் 1;4; அகநா. 235:2; 4. செங்காற் பல்லி; கலித். 11: 21; சீவக. 1909.

(16)
  
(தன் குறையை நிறைவேற்ற உடன்படாத தோழியை நோக்கித் தலைவன், ‘‘காமம் மிக்கவர்கள் மடலேறுவார்கள்; வரைபாய்தல் முதலியவற்றையும் செய்யத் துணிவார்கள்’’என்று தான் மடலேற எண்ணியிருத்தலை உலகின்மேல் வைத்துக் கூறியது.)
 17.   
மாவென மடலு மூர்ப பூவெனக் 
    
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப  
    
மறுகி னார்க்கவும் படுப  
    
பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே. 

என்பது தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன், தோழி குறைமறாமல் கூறியது.

பேரெயின் முறுவலார்.

     (பி-ம்.) 4. ‘காழ்கொளினே’.

     (ப-ரை.) காமம் காழ்க்கொளின் - காம நோயானது முதிர்வுற்றால், மடலும் - பனை மடலையும், மா என -குதிரை எனக் கொண்டு, ஊர்ப - ஆடவர் அதனை ஊர்வர்; குவி முகிழ் எருக்கங் கண்ணியும் - குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும், பூ என - அடையாள மாலையைப் போல, சூடுப - தலையில் அணிந்து கொள்வர்; மறுகின் ஆர்க்கவும் படுப - வீதியில் பிறர் தம்மைக் கண்டு