பக்கம் எண் :


327


பழுமரம் - ஆலமரமுமாம். எமிய மென்றது தோழியையும் நினைந்து. மாலையில் தலைவர் உடனிருத்தல் இன்றியமையாமையின் அக் காலத்திலும் யாம் தனித்திருப்பத் துறந்தோரென்றாள். இனியர் கொல்லோ வென்றது இனியராயிராரென்னும் நினைவிற்று. ஓர் ஊரென்றது ஓரூரிலுள்ள கொல்லனை, உலை - அவனது உலை. தலை வரம்பு: தலை அசை நிலை.

    ஒப்புமைப் பகுதி 2. பழுமரம்: பொருந. 64; சீவக. 93.

    பையுண் மாலை: குறுந். 195:2, 391:6.

    1-2. “பையுண் மாலைப் பழுமரம் படரிய, நொவ்வுப்பறை வாவனோன் சிறை” (தொல். களவு. 23, ந. மேற்.)

    வாவல் மாலையிற் பழுமரம் நோக்கிச் செல்லுதல்: (குறுந். 352:1-5); “ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே .... வாவலும் வயின் றொறும் பறக்கும்” (நற். 218:1-3); “குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய, வாவ லுகக்கு மாலையும்”, “செல்லிய முயலிப் பாஅய சிறகர், வாவலுகக்கு மாலை” (ஐங். 339:2-3, 378:1-2.)

    3. எமியம்: குறிஞ்சிப். 32; அகநா.33:12, 112:7, 371:10.

    6. உலை வாங்கு மிதிதோல்: “மென்றோல், மிதியுலை” (பெரும் பாண். 206-7.)

    5-6. ஒன்றுக்கு ஏழு கூறும் மரபு: குறுந்.24:4, ஒப்பு; குறள்,1278.

(172)
  
(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)
 173.   
பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த  
    
பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப்  
    
பூண்மணி கறங்க வேறி நாணட்  
    
டழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப  
5
இன்னள் செய்த திதுவென முன்னின்  
    
றவள்பழி நுவலு மிவ்வூர்  
    
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா ருளெனே.  

என்பது குறைமறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.

    (குறை - தலைவியைக் காணல் வேண்டுமென்ற காரியம்.)

மதுரைக் காஞ்சிப் புலவன்.

    (பி-ம்) 3-4.‘நானப் பழிபடருண்ணோய்’, ‘நாணடப்பழி’;5.‘இன்னாள்’; 7. தமையினீரேகு மாறுளனே.

    (ப-ரை.) பொன் நேர் ஆவிரை புதுமலர் மிடைந்த - பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்