2. நூன் மாலை மா: “மணிப்பீலி சூட்டிய நூலொடு”, “பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி “ (கலி. 138:8, 140:6.) பனை படு கலிமா; குறுந். 17:1. ஒப்பு. 182:1.
1-2. மடன்மாவிற்கு ஆவிரம் பூ அணிதல்: “அணிப்பூளை யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து”, “அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின், பிணையலங் கண்ணி மிலைந்து” (கலி. 138:9, 139:8-9);“பனிவா ராவிரை பன்மலர் சேர்த்தி” (குணநாற்பது.)
3. மடல் மாவிற்கு மணி கட்டுதல்: “மணியணி பெருந்தார் மரபிற்பூட்டி” (குறுந். 182:2); “சிறுமணி தொடர்ந்து .. உண்ணா நன்மாப்பண்ணி” (நற். 220:1-3); “மணியார்ப்ப, ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து”, “பெய்ம்மணி கட்டி” (கலி. 139:9-10, 140:6.)
மடலேறும் தலைவன் நாணத்தை நீத்தல்: “பெருநா ணீக்கி”(குறுந். 182:4); “அறிவுநம் மறிவாய்ந்த வடக்கமு நாணொடு, வறிதாக”(கலி. 138:3-4); “நோனா வுடம்பு முயிரு மடலேறும், நாணினை நீக்கி நிறுத்து’ (குறள், 1132.)
4. அழிபடர்: குறுந். 185:8; அகநா. 255:8, 285:2, 297:2. வழிவழி சிறத்தல்: மதுரைக். 194; அகநா. 47:1.
5. இன்னள்: குறுந். 98:1, 185:3, 296:7.
2-6. குறுந். 17:1-3, ஒப்பு.
(173)
(தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் நம்மை அவர் பிரிந்து செல்வரேல், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.) 174. | பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக் |
| கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி |
| துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும் |
| அத்த மரிய வென்னார் நத்துறந்து |
5 | பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் |
| பொருளே மன்ற பொருளே |
| அருளே மன்ற வாருமில் லதுவே. |
என்பது பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வெண்பூதி. (பி-ம்) 1.‘புலம்பறு’; 2.‘கவைமுடக்’. ‘கடிநொடி’;4. ‘வெண்ணார்’.
(ப-ரை.) தோழி -, பெயல் மழை - பெய்தலையுடையமழை, துறந்த - பெய்யாது நீங்கிய, புலம்பு உறு கடத்து -