பக்கம் எண் :


331


    நொடி: “அமைக்கண் விடுநொடி” (அகநா. 47:7.)

    2-3. கள்ளியும் புறவும்: குறுந். 154:4-6, ஒப்பு; நற். 314:9-11.

    4. நத் துறந்து: குறுந். 228:4; நற். 329:8, 343:8; அகநா. 85:3, 183:3, 185:3, 223:1, 298:20, 317:21.

    6-7. பொருளும் அருளும்: குறுந். 20:1-2, ஒப்பு, 395:1-3; அகநா. 53:14-6, 75:1-2, 305:9.

(174)
  
(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)
 175.   
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி 
    
உரவுத்திரை பொருத திணிமண லடைகரை 
    
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
    
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் 
5
கிரங்கேன் றோழியிங் கென்கொ லென்று 
    
பிறர்பிற ரறியக் கூறல் 
    
அமைந்தாங் கமைக வம்பலஃ தெவனே. 

என்பது பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லி வற்புறுத்து வாட்குக் கிழத்தி உரைத்தது.

    (வற்புறுத்துதல் - மீண்டும் மீண்டும் கூறி அறிவுறுத்தல்.)

உலோச்சன்.

    (பி-ம்) 1. ‘தேனசைஇயப்பல்’; 5. ‘யிங்கனலென்று’;7. ‘அமைத்தாங்’.

    (ப-ரை.) தோழி-, பருவம் தேன் நசைஇ - செவ்வியை யுடைய தேனை விரும்பி, பல்பறை தொழுதி - பல வண்டுக்கூட்டங்கள், உரவு திரை பொருத - உலாவுதலையுடைய அலைகள் மோதிய, திணி மணல் அடைகரை - செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள, நனைந்த புன்னை - அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது, மா சினை தொகூஉம் - பெரிய கிளையின்கண் கூடுகின்ற, மலர்ந்த பூவின் - மலர்ந்த மலர்களையும், மா நீர் - கரிய நீரையுமுடைய, சேர்ப்பற்கு - கடற்கரைத் தலைவன்பொருட்டு, இரங்கேன் - வருந்தேன்; இங்கு என் என்று - இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று, பிறர் பிறர் அறிய கூறல் - பிறர் பிறர் அறியும்படி கூறிதல், அமைந்தாங்கு அமைக - அவர்களுடைய மனம் அமைந்தபடி