பக்கம் எண் :


336


என்பதற்கு ‘வருவர் போல இருந்தது’ என்றுரைப்பர் நச்சனார்க்கினியர்.வாழி: அசைநிலை. தப்புலப் பினும்: தம், நிலைமொழி; “நத் துறந்து”(குறுந். 174:4) என்றது போல. தண்டியோர் - அலைத்துங் கொள்வோர்(பொருந. 104, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. கடல் பாடு அவிந்து: அகநா. 50:1.

    2. புல்லென்றல்: குறுந். 19:2. ஒப்பு, 3-4. மன்றப் பெண்ணையில்அன்றில் இரவில் நரலுதல்: “யாம நள்ளென .... மன்றப் பெண்ணைவாங்குமடற் குடம்பைத், துணைபுண ரன்றி லுயவுக்குரல் கேட்டொறும்”(நற். 303:1-5.)பெண்ணையில் வாழும் அன்றில் இரவில் நரலுதல்:குறுந். 301:1-4.

    அன்றில் இரவில் நரலுதல்: குறுந். 160:1-4, ஒப்பு.

    அன்றில் பனைமரத்தில் வாழ்தல்: “மன்றிரும் பெண்ணை மடல்சேரன்றில்” (கலி. 129:12); “மனைசேர் பெண்ணை மடிவாயன்றில்”,“பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை, அன்றிலகவும்,“துணைபுண ரன்றில், எக்கர்ப் பெண்ணை யகமடல் சேர”, “பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய், ஒருதனி யன்றில்”, “பனைமிசை, அன்றில் சேக்கு முன்றில்” (அகநா. 50:11, 120:14-5, 260:6-7, 305:12- 3, 360:16-7); ‘பனையின்கண் அன்றில்’ (நன். 301, சங். மேற்.)

    5-6. நாம் தப் புலப்பினும் : குறுந். 340:2.

    7. தணப்பருங் காமம்: குறுந். 57:3, ஒப்பு.

(177)
  
(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில்தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற நும் விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)
 178.   
அயிரை பரந்த வந்தண் பழனத் 
    
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் 
    
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் 
    
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் 
5
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் 
    
கரிய மாகிய காலைப் 
    
பெரிய நோன்றனிர் நோகோ யானே. 

என்பது கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றை (பி-ம்.களவுகற்றொழுகலாற்றாமை) நினைந்து அழிந்து கூறியது.

    (கடி நகர் - தலைவனும் தலைவியும் மணம் புரிந்து கொண்டுஇல்லறம் நடத்தும் மனை. விதும்பல் - விரைதல். அழிதல் - இரங்கல்.)